Thangalaan Movie Review Tamil : பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான்..... சுடச்சுட விமர்சனம் இதோ

Thangalaan Movie Review Tamil : தங்கலான் படத்தின் கதை 1800களில் நடக்கிறது. நிலம், தங்க சுரங்க தேடுதல் குறித்த அரசியலை, ஏற்றத்தாழ்வுகளை பேசுகிறது. ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசை, பாடல்கள் படத்துக்கு பலம். விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகாமோகனன் நடிப்பு மிரட்டல். ஆனால்....

Aug 15, 2024 - 13:30
Aug 16, 2024 - 09:55
 0
Thangalaan Movie Review Tamil : பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான்..... சுடச்சுட விமர்சனம் இதோ
Thangalaan Movie Review Tamil

Thangalaan Movie Review Tamil : பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகாமோகனன், பசுபதி நடித்த தங்கலான் படம் இன்று உலகம் முழுக்க 2, ஆயிரத்து 500க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது. சரி, படம் எப்படி இருக்கிறது? பார்க்கலாமா? ரசிக்கலமா? அல்லது புறக்கணிக்கலமா? 

தங்கலான் விமர்சனம் :

1850களில் கதை தொடங்குகிறது. மைசூர் ஏரியா கோலார் பகுதியில் தங்கம் கிடைக்கிறது. அதை வெட்டி எடுக்க வேண்டும் என்று வெள்ளைக்காரர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால், சமஸ்தான ராஜாவோ அங்கே தங்கம் இல்லை. தங்கம் தேடி சென்றவர்கள் பலி ஆனதுதான் மிச்சம், அங்கே பிரச்னைகள் இருக்கிறது என்கிறார். ஆனாலும், தங்கம் மீது பேராசை கொண்டா கிளைமன்ட் என்ற வெள்ளைக்காரன் தங்க வேட்டையை தொடர்கிறார்.

இந்நிலையில், அதேகாலத்தில்  வட ஆற்காடு பகுதி குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் என்ற கிராமத்தில் மனைவி பார்வதி, குழந்தைகளுடன் வசிக்கும் தங்கலான்(Thangalaan Movie Review)என்ற விக்ரம் மீது கதை நகர்கிறது. அவர் விவசாய பணிகளில் நஷ்டமடைகிறார். வரி கட்ட முடியாததால் உள்ளூர் மிராசுதாரரிடம் குடும்பத்துடன் அடிமை ஆகிறார். அதிலிருந்து மீள தங்கம் தேடி செல்லும் வெள்ளைக்கரன் குழுவில், பசுபதி, மெட்ராஸ் ஆகியோருடன் இணைகிறார். வெள்ளைகாரர்களுடன் அந்த சின்ன குழுவுடன் காட்டுப்பகுதியில் தங்கம் தே டி செ ல்கிறார்கள். அங்கே என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார்கள். தங்கத்தை பாதுகாக்கும் சூன்யகாரியான மாளவிகாமோகனுன் குழுவுக்கும், தங்கலான் குழுவுக்கும் என்னென்ன மோதல் நடக்கிறது. கடைசியில் தங்க சுரங்கத்தை கண்டுபிடித்தார்களா? தங்கலான் மற்றும் அவர் கூட்டாளிகள் தங்கத்தை அள்ளினார்கள் என்பதை நிலம், பொன், அடிமைத்தனம், ஏற்றத்தாழ்வு பின்னணியில் தனது பாணியில் கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்

தங்கலான்(Thangalaan) என்ற கேரக்டரில் மட்டுமல்ல, இன்னும் இரண்டு கே ரக்டர்களி்ல் வருகிறார் விக்ரம்.மூன்றிலும் அவரின் உடை, நடை, நடிப்பு, கோபம் அனைத்தும் அருமை.பல விருதுகள் வெல்வது நிச்சயம். ஒரு வித மனப்பிரமை கொண்டவராக அவரை காண்பித்து, சூன்யக்காரியான மாளவிகாமோகனனுடன் இணைக்கிறார் இயக்குனர். குடும்ப தலைவராக, அடிமையாக, தங்கம் தேடி செல்வராக, கடைசியில் தனது இனத்துக்காக போராடுபவராக கலக்கியிருக்கிறார். அவர் மனைவியாக வரும் பார்வதி, ஊரில் ராமானுஜதாசராக வரும் பசுபதி, வெள்ளைக்காரனாக வரும் டேனியல் ஆகியோரும் மிரட்டியிருக்கிறார்கள். இவர்களை விட தனித்தன்மையுடன் தெரிகிறார் மாளவிகா மோகனன். ஆரத்தி என்ற கேரக்டரில்  உடை, குரல், ஆக்ரோசமமான  என அனைத்தும் கலக்கியிருக்கிறார். அவரை ரசிகர்கள் மறக்க பல ஆண்டுகள் ஆகும். விக்ரம், மாளவிகாமோகனன் சண்டைக்காட்சிகள் அருமை. ஜி.வி.பிரகாசின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தை வேறு தளத்துக்கு கொண்டு செல்கின்றன. குறிப்பாக, முதலில் வரும் அறுவடை பாடல், பிற்பாதியில் வரும் மினுக்கிமினுக்கு பாடல் தாளம்போட வைக்கிறது. 1850 காலகட்டத்தை அப்படியே கொண்டு வந்து இருக்கிறது ஆர்ட் டைரக்டர் எஸ்.எஸ்.மூர்த்தி, ஒளிப்பதிவாளர் கிஷோர்குமார் வொர்க் அபாரம்.

முதற்பாதியில் வேகமாக செ ல்லும் திரைக்கதை, பிற்பாதியில் தடம் மாறுகிறது. கொஞ்சம் போரடிக்கிறது. குறிப்பாக, விக்ரமின் மனப்பிரமை அல்லது அவர் மண்டைக்குள் ஓடும் கனவு காட்சிகள் கதையின் வேகத்தை சோதிக்கின்றன. குறிப்பாக, அவர் பேசும் குரல், அந்த மொழி எளிமையாக இல்லை. டக்கென நமக்கு  புரிய மறுக்கிறது. ஒரு தரப்பு மக்களிடம் இருந்து நிலம் எப்படி பறிபோனது, கோலார் தங்க வயல் பின்னணியில் அடித்தட்டு மக்களின் உழைப்பு, தியாகம் என்ன என்பதை கருவாக சொல்ல முயற்சிக்கிறார் இயக்குனர்.ஆனால், அதை சுற்றி வளைத்து, கடுமையான சினிமா நடையில் சொல்வது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. அதேசமயம், தங்க சுரங்கம் தேடி செ ல்வது, அங்கே சந்திக்கும் பிரச்னைகள், அடிமட்ட மக்களின் வலி, சந்தித்த துரோகங்களை சொன்னது ஓகே.

தங்கம், நிலம் பின்னணியில் அழுத்தமான கதையை(Thangalaan), அந்த காலகட்டத்தில் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். கதைக்களம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை அனைத்தும் ஓகே. ஆனால், திரைக்கதைதான் ஏமாற்றுகிறது. சொல்ல விஷயத்தை இவ்வளவு குழப்பமாக சொல்வது ஏனோ?  கோலார் தங்க வயல் உருவாக காரணமாக இருந்த அடித்தட்டு மக்களின் உழைப்பு, தியாகத்தை புது கோணத்தில் சொன்ன இயக்குனர், அதை எளிமையாக அல்லது கமர்ஷியல் சினிமா நடையில் சொல்லவில்லை. இந்த கதை சொல்லல் முறை, இந்த கால ரசிகர்களுக்கு செ ட்டாகுமா? அவர்களை இழுக்குமா என்பதை யோசிக்கவி்லலை. கோலார் தங்கவயல் மற்றும் தமிழகத்தில் உள்ள பல நிலங்கள் ஒரு பிரிவு மக்களுக்கானவை, அதை அதிகாரவர்க்கம் எப்படி பறித்துக்கொண்டது. என்பதை இந்த கதையின் மூலம் சொல்லவருகிறார் பா.ரஞ்சித்(Pa.Ranjith).

சில வசனங்கள், காட்சி அமைப்புகளை இன்றைய ரசிகர்களால் உடனே புரிந்து கொ ள்ள முடியாதது, இடைவேளைக்கு பிந்தைய பல காட்சிகள் படத்துக்கு மைனஸ். நில அரசியலை கடும் மொழியில் சொல்லியிருப்பதும், பேண்டசி, மாயஉலகத்தை இணைத்து கதையை , இந்த கதையை நகர்த்தியதும் போராடிக்க வைக்கிறது. விக்ரம், மாளவிகாமோகனன், பசுபதி, பார்வதி நடிப்பு, அந்த கால கதைக்களம், ஜி.வி.பிரகாஷ் இசைக்காக படம் பார்க்கலாம்.ஆனால், கண்டிப்பாக உங்களுக்கு கொஞ்சம் பொறுமை தேவை

**

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow