Manorathangal Movie Release : வெளியானது மனோரதங்கள் ஆந்தாலஜி சீரிஸ்... மம்முட்டி, மோகன்லால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Manorathangal Anthology Movie Released Today on ZEE5 OTT : கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், நதியா, பார்வதி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள மனோரதங்கள் ஆந்தாலாஜி சீரிஸ், இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

Aug 15, 2024 - 13:24
Aug 16, 2024 - 09:55
 0
Manorathangal Movie Release : வெளியானது மனோரதங்கள் ஆந்தாலஜி சீரிஸ்... மம்முட்டி, மோகன்லால் ரசிகர்கள் கொண்டாட்டம்!
Manorathangal Anthology Movie Released Today on ZEE5 OTT

Manorathangal Anthology Movie Released Today on ZEE5 OTT : மலையாள எழுத்தாளர் MT வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், அவரின் சிறுகதைகள் தொகுத்து திரைப்படமாக உருவாகியுள்ளது. 9 குறுங்கதைகள் கொண்ட ஆந்தாலஜி சீரிஸாக உருவாகியுள்ள மனோரதங்களை 8 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். அதன்படி, ஒல்லவும் தீரவும், ஷிலாலிகாதம் கதைகளை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். அதேபோல், கடுகண்ணவ ஒரு யாத்திரை கதையை ரஞ்சித்தும், காட்சி என்ற கதையை ஷயாம்பிரசாத்தும் இயக்கியுள்ளனர். வில்பனா கதையை அஸ்வதி வி நாயர் இயக்கியுள்ளார். ஷெர்லாக் என்ற கதையை மகேஷ் நாராயணனும், ஸ்வர்கம் துறக்குண சமயம் கதையை ஜெயராஜன் நாயரும் இயக்கியுள்ளனர். அபயம் தீடி வேண்டும் கதையை சந்தோஷ் சிவன், கடல்காட்டு கதையை ரத்தீஷ் அம்பாட் ஆகியோரும் இயக்கியுள்ளனர். 

மனோரதங்கள் சீரிஸில்(Manorathangal Series) மோகன்லால், மெகா ஸ்டார் மம்முட்டி, ஃபஹத் பாசில், ஆசிப் அலி, பிஜு மேனன், ஹரீஷ் உத்தமன், சித்திக், பார்வதி, இந்திரஜித் சுகுமாரன், நதியா, அபர்ணா பாலமுரளி, மது, சித்திக், இந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இதனை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில், இன்று ZEE 5 தளத்தில் வெளியான மனோதங்கள் ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்த ஆந்தாலஜி சீரிஸில் மோகன்லால் நடித்துள்ள ஒல்லவும் தீரவும் கிளாஸிக்காக உருவாகியுள்ளதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இயக்குநர் பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இருவருக்கும் ஹேட்ஸ் ஆஃப், மம்முக்கோயா, ஹரீஷ் பேரடி, சுரபி ஆகியோரின் நடிப்பும் சிறப்பாக வந்துள்ளதாக பாராட்டியுள்ளனர். மோகன்லாலின் பாபுட்டி கேரக்டர் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளனர். கறுப்பு வெள்ளை நிறத்தில் வின்டேஜ் ஸ்டைலில் உருவாகியுள்ள ஒல்லவும் தீரவும் ஓடிடி ரசிகர்களுக்கு தரமான ட்ரீட் எனவும் பாராட்டி வருகின்றனர். 

அதேபோல், மம்முட்டி நடித்துள்ள கடுகண்ணவ ஒரு யாத்திரையும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. சும்மாவே நடிப்பில் வெளுத்து வாங்கும் மம்முட்டி, இதில் பட்டையை கிளப்பியுள்ளார். கடைசி காட்சியில் அவர் சிரிக்கும் அந்த பகுதி ரொம்பவே டச்சிங் என பாராட்டியுள்ளனர். அதேநேரம் ஃபஹத் பாசில் நடித்துள்ள ஷெர்லாக் கொஞ்சம் ஏமாற்றமாக அமைந்துள்ளதாக நெட்டிசன் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இந்த பகுதி பெரிதாக ரசிக்கவில்லை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

மேலும் படிக்க - சீயான் விக்ரமின் தங்கலான் டிவிட்டர் விமர்சனம்

ஆசிப் அலி நடித்துள்ள வில்பனா எபிசோட் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அஸ்வதி வி நாயர் இயக்கியுள்ள வில்பனா, அட்டகாசமான லவ் ஸ்டோரி என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கடல்காட்டு உட்பட மற்ற கதைகள் ஓரளவு சுமாராக இருப்பதாகவும் ஓடிடி ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். கிளாஸிக்காலாக விறுவிறுப்பு இல்லாத சினிமா ரசனை கொண்ட பார்வையாளர்களுக்கு மனோதரங்கள் பிடிக்கும் எனவும் ஓடிடி ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow