Thangalaan Movie Twitter Review in Tamil : பொன்னியின் செல்வனை தொடர்ந்து சீயான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். முதன்முறையாக பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ளதால் தங்கலான் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கோலார் தங்கச் சுரங்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது தங்கலான். இந்தப் படத்தை ஆஸ்கர் விருது வரை கொண்டு செல்வோம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியிருந்தார். அதனை கன்ஃபார்ம் செய்யும் விதமாக தங்கலான் படத்தில் சீயான் விக்ரமின் நடிப்பும், பா ரஞ்சித்தின் மேக்கிங்கும் மிரட்டியுள்ளதாக டிவிட்டர் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் தங்கலான்(Thangalaan) முதல் காட்சி காலை 9 மணிக்கு தான், ஆனால், மற்ற மாநிலங்களிலும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இந்திய நேரப்படி அதிகாலையிலேயே இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வெளியான டிவிட்டர் விமர்சனங்களில் தங்கலானுக்கு(Thangalaan Twitter Review) பாஸ் மார்க் கிடைத்துள்ளது. தங்கலான் முதல் பாதி ரியல் கூஸ்பம்ஸ், சீயான் விக்ரமின் நடிப்பும், ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் இப்படத்தின் முதுகெலும்பு. அதேபோல் விஷுவலாக தங்கலான் படத்தை தரமான ட்ரீட்டாக கொடுத்துள்ளார் இயக்குநர் பா ரஞ்சித், இது சீயானின் சம்பவம் என ரசிகர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
மேலும் படிக்க - அருள்நிதியின் டிமான்டி காலனி 2 விமர்சனம்
தங்கலான்(Thangalaan Review) வென்றான் என இப்படத்துக்கு 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார் இன்னொரு ரசிகர். கோலிவுட்டில் 2024ம் ஆண்டு வெளியான படங்களில் தங்கலான் மாஸ் எனவும், சீயான் விக்ரம் நடிப்புக்கு விருதுகள் கன்ஃபார்ம் என்றும் கூறியுள்ளார். அதேபோல், ஜிவி பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும், பா ரஞ்சித்தின் இயக்கமும் டாப் நாட்ச். படத்தின் இரண்டாம் பாதி செமையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது, திரைக்கதை சூப்பர் என விமர்சனம் செய்துள்ளார். அதேபோல் இன்னொரு ரசிகர், தங்கலான் வெறித்தனம் வெறித்தனம் வெறித்தனம், பா ரஞ்சித், ஜிவி பிரகாஷ் கூட்டணி மிரட்டல் என தெரிவித்துள்ளார்.
அதேபோல், தங்கலான்(Thangalaan Twitter Review) முதல் பாதிக்கு 4 ஸ்டார் ரேட்டிங், இரண்டாம் பாதிக்கு 4.9 ரேட்டிங் கொடுத்து ஃபயர் எமோஜி விட்டுள்ளார் ரசிகர் ஒருவர். தங்கலான் பெஸ்ட் என்றால் அது சீயான் விக்ரம் நடிப்பு தான், அதற்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கலாம் என்றுள்ள அவர், பா ரஞ்சித், ஜிவி பிரகாஷ் ஆகியோரையும் பாராட்டியுள்ளார். விருதுகளுக்கு தகுதியான திரைப்படம், 100% தியேட்டரில் பார்க்கலாம், கிளைமேக்ஸ் செம என விமர்சனம் செய்துள்ளார்.
தங்கலான்(Thangalaan Review) கோலிவுட்டின் ப்ளாக் பஸ்டர் மூவி, கோலார் தங்கச் சுரங்கம் காட்சிகள் தாறுமாறு. கண்டிப்பாக இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும், அப்படியொரு விஷுவல் ட்ரீட். சீயான் விக்ரமின் நடிப்பு, ஜிவி பிரகாஷ் பிஜிஎம் செம. இயக்குநர் பா ரஞ்சித் மிரட்டிவிட்டார் என இப்படத்துக்கு 4 ஸ்டார் ரேட்டிங் கொடுத்துள்ளார் நெட்டிசன் ஒருவர். அதேபோல், தங்கலான் முதல் பாதி முடிந்ததே தெரியவில்லை. படம் முழுக்க பா ரஞ்சித்தின் டச் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. சீயான் விக்ரம் கேரியரில் தங்கலான் தான் மாஸ்டர் கிளாஸ் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
சோஷியல் மீடியா ட்ராக்கர் அமுதபாரதி, தங்கலான்(Thangalaan Movie Review) சர்வதேச தரத்திலான திரைப்படம் என பாராட்டியுள்ளார். இந்தப் படத்திற்காக சீயான் விக்ரம் ரொம்பவே அர்ப்பணிப்புடன் தனது உயிரையும் ஆன்மாவையும் கொடுத்து நடித்துள்ளார். கதை மெதுவாக நகர்வதாக இருந்தாலும், படத்தின் மேக்கிங்கிற்காக கண்டிப்பாக திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என விமர்சனம் செய்துள்ளார்.
அதேநேரம், சோஷியல் மீடியா ட்ராக்கர் கிறிஸ்டோபர் கனகராஜ், தங்கலான்(Thangalaan Review) படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார். அதாவது “தங்கலான் – மங்கலான்... சாரி சீயான்” என ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது. இதனை ட்ரெண்ட் செய்து வரும் விக்ரம் ரசிகர்கள், ”இவரை தெரியல சந்திரமுகி 2 சூப்பர்ன்னு சொன்னவர்” என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.