தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான விஜய் மற்றும் அஜித்தின் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் வரும் ஜனவரி 23-ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வேண்டிய இந்த ரீ-ரிலீஸ்கள் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் ரேசிலிருந்து விலகிய 'தெறி' - புதிய தேதி இதோ!
விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கிய 'ஜனநாயகன்' திரைப்படம் சென்சார் சிக்கலால் பொங்கலுக்கு வெளியாகவில்லை. இதனால் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தை பொங்கலுக்கு வெளியிடத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த நேரத்தில் வெளியான புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் விடுத்த வேண்டுகோளால் 'தெறி' படத்தின் ரீ-ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இப்படம் வரும் ஜனவரி 23-ம் தேதி வெளியாகும் எனத் தாணு அறிவித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு மிரட்ட வரும் 'மங்காத்தா'
அதே ஜனவரி 23-ம் தேதி, அஜித்தின் 50-வது திரைப்படமான 'மங்காத்தா' மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜாவின் அதிரடி இசையில் 2011-ல் வெளியான இப்படம் ஒரு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அஜித்தின் 'சால்ட் அண்ட் பெப்பர்' லுக் மற்றும் வில்லத்தனமான நாயகன் கதாபாத்திரம் ரசிகர்களை இன்றும் கவர்ந்து வருகிறது. இப்படத்தின் புதிய டிரெய்லரையும் சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்
ஒரே நாளில் விஜய்யின் ஆக்ஷன் கலந்த 'தெறி' மற்றும் அஜித்தின் மாஸான 'மங்காத்தா' ஆகிய இரு படங்கள் வெளியாவதால், சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இப்போதே தங்கள் கொண்டாட்டங்களைத் தொடங்கிவிட்டனர்.

LIVE 24 X 7