மம்முட்டிக்கு தேசிய விருது வழங்காதது ஏன்? - நடுவர் குழு பதிலால் மீண்டும் சர்ச்சை..

சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டிக்கு வழங்காததற்கு காரணம் குறித்து கேரள நடுவர் குழுவில் ஒருவராக இடம்பெற்றுள்ள இயக்குநர் எம்.பி.பத்மகுமார் கூறியிருக்கும் பதில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Aug 19, 2024 - 00:49
Aug 19, 2024 - 01:00
 0
மம்முட்டிக்கு தேசிய விருது வழங்காதது ஏன்? - நடுவர் குழு பதிலால் மீண்டும் சர்ச்சை..
நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நடிகர் மம்முட்டி

2022ம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகள் ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் எளிமையாக காட்சிப்படுத்தப்படும் மலையாள திரைபடங்களில் சவுதி வெள்ளக்கா மற்றும் ஆட்டம் ஆகிய படங்களுக்கு சில விருதுகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த வருடன் நடிகர் மம்முட்டிக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏனென்றால் 2022ம் ஆண்டில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம், ரோஷாக் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிகாட்டியிருந்தார் மம்முட்டி. ஆனால், சிறந்த நடிகருக்கான  தேசிய விருது மம்முட்டிக்கு வழங்கப்படாமல், நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு வழங்கப்பட்டது. இதனால் மம்முடியின் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சமூக வலைதளங்களில் அவரை தேசிய விருதுகள் குழு புறக்கணிப்பதாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கேரளாவிலிருந்து தேசிய விருதுக்கான படங்களை தேர்வு செய்து மத்திய குழுவுக்கு அனுப்பும் கேரள நடுவர் குழுவில் ஒருவராக இடம்பெற்றுள்ள இயக்குநர் எம்.பி.பத்மகுமார் கூறுகையில், ”நடிகர் மம்முட்டிக்கு விருது வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. சாதி, மதம், அரசியலையும் தாண்டி அவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். அவருக்கு தேசிய விருதுகள் கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், மம்முட்டியின் படங்கள் எதுவும் இந்த விருதுக்கான தேர்வில் கலந்துக்கொள்ள அனுப்பப்படவே இல்லை. அப்படி இருக்கையில் எப்படி மம்முட்டிக்கான சிறந்த நடிகர் விருது கிடைக்கும்? அவருக்கு விருது வழங்காததற்கு பின்னணியில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

எப்படி ஒரு சிறந்த திரைப்படத்தை தேசிய விருதுக்கு அனுப்பாமல் இருக்க முடியும் என இயக்குநர் எம்.பி.பத்மகுமாரின் இந்த பதிலை கேட்ட நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், முறையான ஆலோசனைக்கு பிறகு இந்த தேசிய திரைப்பட விருதுகள்  வழங்கப்படவில்லை என பல தரப்பில் இருந்து கருத்துகள் எழுந்து  வருகிறது.

அதன்படி, தமிழில் சிறந்த நடிகைக்கான விருதை சாய் பல்லவிக்கு வழங்கவில்லை எனவும், தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை சமூகத்திற்கான நல்ல கருத்தை கொண்டிருக்கும் கார்கி திரைப்படத்திற்கு வழங்கவில்லை எனவும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow