Hindus Attack in Bangladesh : இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?.. பொங்கியெழுந்த விவேக் ராமசாமி!

Vivek Ramaswamy Condemns Hindus Attack in Bangladesh : ''1971ம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரத்திற்காக இரத்தக்களரிப் போரை நடத்தியது. இலட்சக்கணக்கான வங்கதேச மக்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இது பெரும் சோகம்'' என்று விவேக் ராமசாமி கூறியுள்ளார்.

Aug 15, 2024 - 14:13
Aug 16, 2024 - 09:55
 0
Hindus Attack in Bangladesh : இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?.. பொங்கியெழுந்த விவேக் ராமசாமி!
Vivek Ramaswamy Condemns Hindus ttack in Bangladesh

Vivek Ramaswamy Condemns Hindus Attack in Bangladesh : வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். முதலில் அமைதியாக நடந்த போராட்டம் பின்பு  வன்முறையாக மாறியது. இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்த, அவர்களுக்கு ஆளும் கட்சியான அவாமி லீக் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், பயங்கர ஆயுதங்களாலும் தாக்கிக் கொண்டனர். நாடு முழுவதும் பரவிய இந்த மோதலில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர். வங்கதேசத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், ஆளும் கட்சிக்கு சொந்தமான கட்டடங்கள் ஹோட்டல்கள் ஆகியவற்றுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

பின்னர் இது இந்துக்களுக்கு எதிரான வன்முறையாக மாறியது. இஸ்கான் கோயில், காளி கோயில் உள்பட பல்வேறு இந்து கோயில்களுக்கு தீ வைக்கப்பட்டன. சில இடங்களில் இந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்றதால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி வந்து விட்டார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் முகமது யூனுஸ் பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து பின்பு பின்வாங்கியவரும், இந்திய வம்சாவளியுமான விவேக் ராமசாமி வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை இலக்கு மிகவும் தவறானது.

1971ம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரத்திற்காக இரத்தக்களரிப் போரை நடத்தியது. இலட்சக்கணக்கான வங்கதேச மக்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இது பெரும் சோகம். அதன்பிறகு வங்கதேசம் அரசு வேலைவாய்ப்பில் இடஓதுக்கீடு கொண்டு வந்தது. 80% அரசு வேலை ராணுவ வீரர்கள், சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் வாரிசுகள்,  பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டது. மீதி 20% இடஒதுக்கீடு மட்டுமே தகுதியின் அடிப்படையில் கடைபிடிக்கப்பட்டது.

2018ம் ஆண்டு வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்ததால்  இடஒதுக்கீட்டு முறை ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் போராடியதால் மீண்டும் இந்த ஆண்டு  இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இது மீண்டும் பெரும் வன்முறைக்கு வழிவகுத்து அரசை கவிழ்த்து விட்டது. பிரதமர் தப்பி ஓடி விட்டார்.

பயங்கரவாதிகள் வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினரை குறிவைத்து(Hindus Attack in Bangladesh) தாக்குதல் நடத்தி வருகின்றனர். 1971ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் வன்முறையின் தவறுகளை சரிசெய்வதற்காக உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீடு, இப்போது அதிக பாலியல் வன்கொடுமை  மற்றும் வன்முறையை நோக்கிச் செல்கிறது'' என்று விவேக் ராமசாமி கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow