Actor Vikram Watch Thangalaan Movie with Fans : கோலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம் இன்று ரிலீஸானது. பா ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் சீயான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்கச் சுரங்கத்தை பின்னணியாக வைத்து தங்கலான் படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித். பீரியட் ஜானரில் உருவாகியுள்ள தங்கலான் படத்துக்காக விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். முதன்முறையாக பா ரஞ்சித் – சீயான் விக்ரம் இணைந்ததால், இந்தப் படத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியான தங்கலான்(Thangalaan Movie) படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. மாய உலகம், வரலாற்று புனைவு என பா ரஞ்சித் புதிய ஜானரில் முயற்சி செய்துள்ளார். ஆனால், விக்ரம், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பு மிரட்டலாக உள்ளதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், ஜிவி பிரகாஷின் பின்னணி இசையும் தங்கலானுக்கு பலம் சேர்த்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இதுதவிர பா ரஞ்சித்தின் மேக்கிங் ஸ்டைல் நன்றாக இருந்தாலும் படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைப்பது கடினம் என்றே சொல்லப்படுகிறது.
சென்னை சத்யம் திரையரங்கில் திரையிடப்பட்டுள்ள தங்கலான்(Thangalaan Movie) படத்தை சீயான் விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர். அப்போது விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோருடன் ரசிகர்கள் போட்டிப் போட்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர். தங்கலான் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த சீயான் விக்ரம், இன்று திரையரங்குகளுக்கும் சென்று ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார். இதனிடையே தங்கலான் படத்தில் சீயான் விக்ரம் நடித்த அதே கெட்டப்பில், ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குச் சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
"என்ன நீங்களும் அதே Getup -ல..?" - விக்ரமின் தங்கலான் படம் பார்க்க தங்கலான் கெட் அப்பில் வந்த ரசிகர் @chiyaan @beemji @GnanavelrajaKe @StudioGreen2 @OfficialNeelam@parvatweets @MalavikaM_ @gvprakash #ChiyaanVikram #Thangalaan #ThangalaanFDFS #MalavikaMohanan #KumudamNews24x7 pic.twitter.com/rpYl14il1S
— KumudamNews (@kumudamNews24x7) August 15, 2024
முன்னதாக தங்கலான் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், தனது ரசிகர்கள் குறித்து பெருமையாக பேசியிருந்தார் சீயான் விக்ரம். செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறியிருந்த அவர், “எனக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என தங்கலான் வெளியாகும் போது தியேட்டரில் வந்து பாருங்க” என கலாய்த்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீயான் ரசிகர்கள் தங்கலான் படம் குதிரையில் சென்று மாஸ் காட்டியுள்ளனர். அதேபோல் திருச்சியில் சீயான் விக்ரம் ரசிகர்கள் செய்த முரட்டு சம்பவம் வேற லெவலில் ட்ரெண்டாகி வருகிறது.
ஆவேசமாக வந்த தங்கலான் படை.. "அப்படியே நில்லுங்க.. உள்ளே அனுமதிக்காத திரையரங்கம்.." சட்டை போட்டதும் கிடைத்த என்ட்ரி!!#thangalaan | #theatre | #trichy | #vikram | #paranjith | #malavikamohanan | #parvathy | #gvprakash | #movie | #kumudam | #kumudamnews24x7 pic.twitter.com/wkjbIg5KLF
— KumudamNews (@kumudamNews24x7) August 15, 2024
அதாவது, தங்கலான் படத்தில் வரும் சீயான் விக்ரம் போல, சட்டை அணியாமல், ரத்தம் வடிவதை போல மேக்கப் போட்டுக்கொண்டு சென்றனர். ஆனால், அவர்களைத் தடுத்து நிறுத்திய தியேட்டர் ஊழியர்கள், இப்படியெல்லாம் கெட்டப் போட்டு உள்ளே வரக் கூடாது என அன்புக் கட்டளை போட்டனர். இதனையடுத்து விக்ரமின் ரசிகர்கள் சட்டை அணிந்துகொண்டு தங்கலான் படம்(Thangalaan Movie) பார்க்க தியேட்டருக்குள் சென்றனர். தங்கலான் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் நல்ல ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.