பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்.. ரூ.15 லட்சம் கோடி இழப்பு

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடர்ந்து 2200 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. சென்செக்ஸ் 2352 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78629 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Aug 5, 2024 - 12:27
Aug 6, 2024 - 10:10
 0
பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..  ரூ.15 லட்சம் கோடி இழப்பு
stock market crash today

மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் தொடர்ந்து 2200 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. சென்செக்ஸ் 2352 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78629 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளில் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. காலை 10  மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,287.82 அல்லது 1.56% புள்ளிகள் சரிந்து 79.734.02 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 451.75 அல்லது 1.52% புள்ளிகள் சரிந்து 24,341.90 ஆக வர்த்தகமானது. காலை 11.40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2,432.11 அல்லது 2.38% புள்ளிகள் சரிந்து 78,688.98 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 708.85 அல்லது 2.87% புள்ளிகள் சரிந்து 24,008.85 ஆக வர்த்தகமானது.

கடந்த மாதத்தில் வரலாற்று உச்சம் தொட்டு வர்த்தகமான பங்குச்சந்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் கடும் சரிவடைந்துள்ளது. வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் 5கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.BSE ரூ.457 லட்சம் கோடியில் இருந்து ரூ.447 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 

அமெரிக்க பொருளாதார நிலை, அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பு நிலை மோசமடைந்தது, அந்நாட்டில் வேலையின்மை ரேட் 4.3 சதவிகிதம் உயர்வு  உள்ளிட்ட காரணங்களால் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா அகிய நாடுகளிலும் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது. ஜப்பானில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இவை இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, பட்ஜெட் அறிவிப்பும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. 

பங்குச்சந்தையில் உள்ள எல்லா துறைகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை மற்றும் சன் ஃபார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவுடனும் வர்த்தகமானது. இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தை இந்த மாதம் முழுவதும் சரிவுடன் வர்த்தகமாக வாய்ப்பிருப்பதாக முதலீட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் பொருளாதாரம் ரெசிஷனில் மூழ்க அடுத் 12 மாதத்தில் 15 முதல் 25 சதவீதம் வரையில் வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் பிரபலமான முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாக்ஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க மத்திய வங்கி செப்டம்பர் கூட்டத்தில் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளையும், நவம்பர் கூட்டத்தில் 50 அடிப்படை புள்ளிகளையும் குறைக்கும் என ஜேபி மோர்கன் கணித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow