முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியில் எரிசக்தி வணிகத்தை நிர்வகித்து வருகிறார். இவர் நீடா அம்பானியுடன் இணைந்து ஐ.பி.எல். அணிகளில் ஒன்றான மும்பை இண்டியன்ஸ் அணியையும் வழிநடத்தி வருகிறார்.
ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபரான வீரேன் மெர்ச்செண்டின் மகள் ராதிகா மெர்ச்செண்ட்டுக்கும் கடந்த 2023ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் நாத்வாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் வைத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக முந்தைய சங்கீத் நிகழ்ச்சி, மும்பையில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் சினிமா பிரபலங்கள், விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் சல்மான் கான், வருண் தவான், தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குநர் அட்லி, நடிகைகள் வித்யா பாலன், மாதுரி தீக்ஷித், ஆலியாபட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மனைவி சாக்ஷியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தவிர டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த், மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் கலந்துகொண்டார். இதில், ரஜினிகாந்த் மணமகன் ஆனந்த் அம்பானியோடு இணைந்து, ஹிந்தி பாடல் ஒன்றுக்கு ஜாலியாக நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Rajnikanth and #AnilKapoor dancing away with #AnantAmbani at the latter's wedding with #RadhikaMerchant today.#Trending pic.twitter.com/lkJNnFf4zf
— Filmfare (@filmfare) July 12, 2024
மேலும் இந்நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பாடகர் ஹர்தி சந்துவுடன் இணைந்து நடமாடினார். தவிர பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது வருங்கால கணவரும், பிரபல இசையமைப்பாளருமான நிக் ஜோன்ஸ் உடனும், நடிகை மாதிரி தீட்சித் தனது கணவர் மற்றும் மகனுடன் கலந்துகொண்டார்.
முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஷிவாவுடன் கலந்துகொண்டார். கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா தனது சகோதரர் குர்ணால் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் உடன் பங்கேற்றார். இந்திய கிரிக்கெட் வீரரும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டனுமான கே.எல்.ராகுல் நடிகர் சுனில் ஷெட்டியுடன் கலந்துகொண்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யன் ஓஜா, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோரும் கலந்துகொண்டனர். சூர்யகுமார் யாதவ் மற்றும் யுவேந்திர சாஹல் இருவரும் தங்களது மனைவியுடன் கலந்துகொண்டனர்.
முக்கியமாக முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியாவிற்கான பிரிட்டிஷ் உயர் அதிகாரி லிண்டி கேமரூன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரர் ஜான்சீனா, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாடகி ஆஷா போஷ்லே ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் மற்றும் மிசா பாரதி ஆகியோருடன் கலந்துகொண்டார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இசைக்குழுவினருடன் சேர்ந்து நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், நடிகர் ஜாக்கி ஷெரோஃப், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரிதேஷ் தேஷ்முக் தனது மனைவி ஜெனிலியா டிசோசா உடன் பங்கேற்றார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவரது மனைவி கௌரி கான் உடனும், விக்கி கௌசல் அவரது மனைவி காத்ரினா கைஃப் உடனும், ரன்பீர் கபூர் தனது மனைவி ஆலியா பட் உடன் கலந்து கொண்டனர். இதனால், மும்பை நகரமே திருவிழா கோலம் பூண்டு காணப்படுகிறது.