ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு கணினி வழியில் இன்று முதல் துவக்கம்
முறைகேடு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு கணினி வழியில் இன்று முதல் துவங்குகிறது.
முறைகேடு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு கணினி வழியில் இன்று முதல் துவங்குகிறது.
இந்தியாவில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தோ்வுகள் முகமை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்துகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டின் முதல்கட்ட நெட் தேர்வு ஜுன் 19 ஆம் தேதி நாடு முழுவதும் ஆயிரத்து 205 மையங்களில் நடத்தப்பட்டது. இந்தத் தோ்வை 9 லட்சத்து 8 ஆயிரத்து 580 பட்டதாரிகள் எழுதினர். அவ்வாறு நடந்து முடிந்த நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெறதாக புகார்கள் எழுந்தன. இந்த பிரச்சனை பூதாகரமாக வெடிக்க, மத்திய புலனாய்வு அமைப்பு குறுக்கிட்டு வழக்குப்பதிவு செய்தது.
இதனையடுத்து, டெலிகிராம் மூலம் வினாத்தாள்கள் கசிந்ததாக எழுந்த புகாரினை தொடர்ந்து, வினாதாள் கசிய காரணமாக இருந்த சேனல்கள் அனைத்தையும் முடக்கியது டெலிகிராம் நிறுவனம்.
மேலும், நெட் தேர்வுக்கு எதிராக முறைகேடு புகார்கள் பெறப்படவில்லை எனவும் மாணவர்களின் நலனை பாதுகாக்க, எங்களுக்கு கிடைத்த தகவல்களின் பேரில் தாங்களாகவே முன்வந்து தேர்வை ரத்து செய்தோம் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், விரைவில் மீண்டும் தேர்வு நடத்தபடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை கடந்த ஜூன் 21ம் தேதி அமல்படுத்தியிருந்தது. இந்த புதிய சட்டத்தின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது யுஜிசி நெட் தேர்வு தாள் கசிவு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து அரசின் இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: HBD Chennai: விசித்திரமான காரணத்திற்காக கட்டப்பட்ட நேப்பியர் பாலம்..வரலாறு இதுதான்!
இதனையடுத்து, மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. அதன்படி இத்தேர்வு கணினி வழியில் இன்று துவங்குகிறது.
What's Your Reaction?