HBD Chennai: விசித்திரமான காரணத்திற்காக கட்டப்பட்ட நேப்பியர் பாலம்..வரலாறு இதுதான்!
பல வண்ணங்களில் மிளிரும் வெளிச்சத்தில் இன்று பலரும் நின்று போட்டோ ஷூட் எடுக்கும் சென்னையின் நேப்பியர் பாலம், ஆங்கிலேயரால் ஒரு விசித்திரமான காரணத்திற்காக தான் கட்டப்பட்டது என்ற வரலாறு தெரியுமா? அது என்ன காரணம்..நேப்பியர் பாலத்தின் கதை என்ன என்பதை விவரிக்கிறது இந்த சென்னை தின சிறப்பு கட்டுரை...
பல வண்ணங்களில் மிளிரும் வெளிச்சத்தில் இன்று பலரும் நின்று போட்டோ ஷூட் எடுக்கும் சென்னையின் நேப்பியர் பாலம், ஆங்கிலேயரால் ஒரு விசித்திரமான காரணத்திற்காக தான் கட்டப்பட்டது என்ற வரலாறு தெரியுமா? அது என்ன காரணம்..நேப்பியர் பாலத்தின் கதை என்ன என்பதை விவரிக்கிறது இந்த சென்னை தின சிறப்பு கட்டுரை...
இன்று பெரும்பாலானோர் மெரினா கடற்கரையை ரசிப்பதற்கு முன், இரவு நேரங்களில் கலர் கலரான விலக்குகளில் மிளிரும் நேப்பியர் பாலத்தை ரசிப்பதை வழக்கமாக்கியிருக்கின்றனர். இப்படி சென்னையில் உள்ள எந்த பாலத்திற்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை, நேப்பியர் பாலத்திற்கு வழங்கியுள்ளனர் சென்னை வாசிகள்.
நேப்பியர் பாலத்தின் அழகியல் மட்டுமல்லாது, ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் இருந்து தற்போது வரை அசையாமல் நிற்கும் அதன் உறுதியும் போற்றத்தக்கதே. 1869ம் ஆண்டில் மெட்ராஸ் ஆளுநராக நேப்பியர் இருந்தபோது கட்டப்பட்டதுதான் நேப்பியர் பாலம். அந்த காலத்திலும் இது 'இரும்பு பாலம்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. மெரினாவையும், புனித ஜார்ஜ் கோட்டையையும் இணைக்கும் வகையில் 148 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது இந்த பாலம். நேப்பியர் பாலத்தின் சிறப்பம்சங்கள் ஒருபுறம் இருந்தாலும், இது என்ன காரணத்திற்காக கட்டப்பட்டது என்பதே இந்த பாலத்தை மேலும் சுவாரஸ்யமானதாக ஆக்குகிறது.
இப்போது நேப்பியர் பாலம் இருந்த இடதிற்கு அருகே தான் பிரிட்டிஷ் ஆட்சி செய்த காலத்தில் நரிமேடு என்ற ஒரு குன்று இருந்திருக்கிறது. 'ஜோக் ஹில்’ என்று அழைக்கப்பட்ட அந்த குன்றில் இருந்து பீரங்கியை வைத்து தாக்கினால் கோட்டையை முழுமையாக அழிக்கமுடியும் என்ற யூகத்தை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்ததால், உடனடியாக அந்த குன்றை அகற்ற வேண்டும் என எண்ணினர். அவர்கள் எண்ணியப்படி, குன்றின் மண்னை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, மாட்டு வண்டிகளில் சுமந்து சென்று ஒரு இடத்தில் கொட்டினர். அப்படி மண் எடுக்கப்பட்ட இடம் தான் தற்போது ’மண்ணடி’ என அழைக்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஐயோ.. இனிமே உஷாரா இருங்க மக்களே... இதெல்லாம் சாப்பிட்டால் ஆபத்தாம்..!
இப்படி ஒரு பெரிய குன்று இருந்த இடமே தெரியாமல் போனதால் அங்கு நேப்பியர் பாலத்தை கட்டினர் ஆங்கிலேயர்கள். இப்போது சென்னையின் முக்கிய பாலமாக திகழும் நேப்பியர் பாலத்தின் அடியில் தான் கூவம், கடலில் சென்று கலக்கிறது. இப்படி கூவத்தின் மேல் அமைந்திருக்கும் பாலம், அழகியலாக கருதப்படும் பெருமை சென்னைக்கே உறியது என்றால் மிகையாகாது.
What's Your Reaction?