Vairamuthu : மதுரை மண்ணில் பெறும் விருது.. சரித்திர விருது.. வைரமுத்து பெருமிதம்

Vairamuthu Post of Muthamizh Perum Kavignar in Madurai : விருதுகள் புளகாங்கிதம் தந்த காலம் போய்விட்டது; இப்போது வெறும் உலர்ந்த புன்னகைதான் ஆனால் இது சராசரி விருதல்ல; சரித்திர விருது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

Aug 5, 2024 - 06:14
Aug 5, 2024 - 11:43
 0
Vairamuthu : மதுரை மண்ணில் பெறும் விருது.. சரித்திர விருது.. வைரமுத்து பெருமிதம்
Vairamuthu Post of Muthamizh Perum Kavignar in Madurai

Vairamuthu Post of Muthamizh Perum Kavignar in Madurai : மதுரை தமிழ் சங்கம் சார்பில் அளிக்கப்படும் முத்தமிழ்ப் பெருங்கவிஞர் என்ற விருது சராசரி விருதல்ல; சரித்திர விருது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இந்த விருது எனக்கான பெருமையல்ல; என்னை எடுத்துத் தமிழ் தன்னை அலங்கரித்துக் கொள்கிறது என்று கூறியுள்ளார் வைரமுத்து

 பொன்விழா கொண்டாடும் மதுரைத் தமிழ் இசைச் சங்கம்  கவிஞர் வைரமுத்துவுக்கு 'முத்தமிழ்ப் பெருங்கவிஞர்' என்ற பட்டத்தை வழங்குகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. இதுவரை 39 நூல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து மூன்று பல்கலைக் கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டம் பெற்றவராவார்.

மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி  நடைபெறும் விழாவில், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச் சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா, தேவகி முத்தையா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.  இதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வைரமுத்து (Vairamuthu Twitter X Post).

மதுரை வருகிறேன் ஒரு பட்டம் பெறுகிறேன் எல்லார்க்கும்  பகிர்ந்துதரப் போகிறேன் விருதுகள் புளகாங்கிதம் தந்த காலம் போய்விட்டது; இப்போது வெறும் உலர்ந்த புன்னகைதான்.

ஆனால் இது சராசரி விருதல்ல; சரித்திர விருது பொன்விழாக் காணும் மதுரைத் தமிழ் இசைச் சங்கத்தால் வழங்கப்படும் விருது. அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைத் தமிழ் இசைச்  சங்கத் தலைவர் ஏ.சி.முத்தையா,  திருமதி. தேவகி முத்தையா உள்ளிட்டோர்  பட்டயமும் பொற்கிழியும் வழங்கிப் பாராட்டும் விருது.

ராஜா முத்தையா மன்றத்தில் திங்கட்கிழமை மாலை 6மணிக்கு வழங்கப்படும் விருது மதுரைத் தமிழர்களே மதுரத் தமிழ் வாணர்களே வையை நதிகிழிக்கும் மைய மதுரையிலே துய்ய தமிழ்கேட்கப் பைய வரும் பாங்கியரே! சங்கத் தமிழின் சிங்கக் குருளைகளே களிப்பேற்ற வரும் புலிப் போத்துகளே உங்களைக் காணக் காத்திருக்கிறேன்

இந்த விருது எனக்கான பெருமையல்ல; என்னை எடுத்துத் தமிழ் தன்னை அலங்கரித்துக் கொள்கிறது. கவிதா மண்டலம் களிகொள்கிறது ஏனென்றால் விருதின் பெயர் ‘முத்தமிழ்ப் பெருங்கவிஞர்’ என்று பெருமையோடு பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

வைரமுத்து எத்தனையோ விருதுகளை பெற்றிருந்தாலும் மதுரையில் பெறப்போகும் பட்டமும் விருதும் எப்போதுமே ஸ்பெஷல்தான்,

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow