Engineering College Fees : சிறப்பு இடஒதுக்கீடு மாணவர்களிடம் கட்டணம் வசூல்... பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு

Special Reservation Students Engineering College Fees : பொறியியல் கலந்தாய்வில் அரசு வழங்கும் சிறப்பு இட ஒதுக்கீடு, கட்டண சலுகையின் கீழ் சேரும் மாணவர்களிடம், பொறியியல் கல்லூரிகள் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Aug 17, 2024 - 13:37
Aug 17, 2024 - 15:12
 0
Engineering College Fees : சிறப்பு இடஒதுக்கீடு மாணவர்களிடம் கட்டணம் வசூல்... பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு
பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை

Special Reservation Students Engineering College Fees : சில பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வின் வழி அரசு ஒதுக்கீட்டில் சேர வரும் மாணவ, மாணவிகளிடமிருந்து அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வற்புறுத்தப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. எனவே, அரசு ஒதுக்கீட்டில் கலந்தாய்வின் மூலம் சேர்க்கைக்கு வரும் மாணவர்களிடம் இருந்து, பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பொறியியல் கல்லூரிகளில் அரசு வழங்கும் சலுகையின் கீழ் சேர்க்கைக்கு விணப்பித்துள்ள சில மாணவர்களிடம், முழு கட்டணமும் செலுத்த வேண்டும் என வற்புறுத்தப்படுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டில், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்க்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. 

அதேபோல முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுடைய கல்வி கட்டணத்தை மட்டும் ஆண்டுதோறும் செலுத்தி வருகிறது. மேலும், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு ரூபாய்க்கு உட்பட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர், கிறிஸ்த்துவ மதம் மாறிய மாணவ மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்துகிறது. ஆனால், தற்போது நடைபெற்று வரும் பொறியியல் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர முறையில் அரசு ஒதுக்கீட்டில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவிகளிடம் இத்தகைய கட்டணங்களை செலுத்த வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் நிர்பந்தித்துள்ளன. 

இதுகுறித்து புகார்கள் வந்ததை அடுத்து, அரசு ஏற்கனவே உத்தரவிட்டதன் அடிப்படையில் இத்தகைய மாணவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும், இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதனால் கட்டணங்களை செலுத்துமாறு நிர்பந்திக்கப்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow