ஆத்தி.. எத்தாதண்டி.. குற்றாலம் அருவிக்கரையில் ரெஸ்ட் எடுத்த மலைப்பாம்பு.. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

குற்றாலம் மெயின் அருவி செல்லும் நுழைவாயில் அருகே மிகப்பெரிய அளவிலான மலைப்பாம்பு ஒன்று அந்த பாதையின் ஓரமாக கிடந்துள்ளது.மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்துச்சென்று வனப்பகுதியில் விட்டனர்.

Sep 9, 2024 - 11:38
 0
ஆத்தி.. எத்தாதண்டி.. குற்றாலம் அருவிக்கரையில் ரெஸ்ட் எடுத்த மலைப்பாம்பு.. சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
snake courtallam


குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சீசன் களைகட்டியுள்ளது. மெயின் அருவியின் கேட் அருகே பல அடி நீள ராட்சத மலைப்பாம்பு ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். குற்றாலம் மெயின் அருவியில் கிடந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்ததை அடுத்து அங்கிருந்த சுற்றுலா பயணிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனனர்.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை முடிவடையாத நிலையில் அங்குள்ள அருவிகளில் தண்ணீரானது சீராக கொட்டி வருகிறது. 

இந்த நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கு வருகை தந்து தங்களது குடும்பத்தினருடன் ஆனந்த குளியலிட்டு வருகின்றனர்.அந்த வகையில், இன்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் மெயின் அருவியில் குளிப்பதற்காக சென்று கொண்டிருந்த நிலையில், குற்றாலம் மெயின் அருவி செல்லும் நுழைவாயில் அருகே மிகப்பெரிய அளவிலான மலைப்பாம்பு ஒன்று அந்த பாதையின் ஓரமாக ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தது.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த தென்காசி தீயணைப்பு துறையினர் சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பை லாபாகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். குற்றாலம் மெயின் அருவி செல்லும் நுழைவாயில் அருகே கிடந்த மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாக பிடித்த நிலையில், அங்கிருந்த சுற்றுலா பயணிகள் கைதட்டி ஆரவாரம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அது பத்திரமாக வனக்பகுதியில் விடப்பபட்டது.

கடந்த மே மாதம் ஐந்தருவியில் அருவிக்கு மேல் பகுதியில் குரங்கு ஒன்று மலைப்பாம்பிடம் சிக்கி சத்தமிட்டுக் கொண்டு இருந்ததை சுற்றுலா பயணிகள் பார்த்தனர்.
இது குறித்து செங்கோட்டை தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புப் படையினர் வந்து குரங்கை மீட்டு பாம்பிடம் இருந்து விடுவித்தனர். மேலும், சுமார் 10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத் தனர். இதையடுத்து அந்த பாம்பானது அடர்ந்த வனப்பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow