GOAT: விஜய்யின் கோட் படம் பார்த்தாரா அஜித்..? வெங்கட் பிரபுவுக்கு போன சூப்பர் மெசேஜ்!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அஜித்திடம் இருந்து குட் நியூஸ் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sep 9, 2024 - 11:40
 0
GOAT: விஜய்யின் கோட் படம் பார்த்தாரா அஜித்..? வெங்கட் பிரபுவுக்கு போன சூப்பர் மெசேஜ்!
கோட் படம் பார்த்தாரா அஜித்?

சென்னை: விஜய்யின் 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் டைம் அதிக எதிர்பார்ப்புகளுடன் செப் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் கோட் படத்தில் நடித்துள்ளனர். கோட் ரிலீஸாகி நான்கே தினங்களில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனிடையே கோட் படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள், இயக்குநர் வெங்கட் பிரபுவையும், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் ட்ரோல் செய்து வருகின்றனர். அதாவது கோட் ரிலீஸுக்கு முன்னர் இப்படத்தில் அஜித்தின் ரெஃபரன்ஸ் இருப்பதாக வெங்கட் பிரபு கூறியிருந்தார். அதேபோல், மங்காத்தாவை விட கோட் திரைப்படம் 100 மடங்கு அதிகம் இருக்க வேண்டும் என அஜித் பாராட்டியிருந்ததாகவும் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். ஆனால், கோட் வெளியாகி இப்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் வரும் ‘தல’ என்ற கேப்ஷன், கிரிக்கெட் வீரர் தோனியை குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது அஜித் இல்லையென்றும் சர்ச்சையானது.

அதேபோல், அஜித்தை கலாய்த்து விஜய் ரசிகர் ஒருவர் போட்டிருந்த டிவிட்டை, ஏஜிஎஸ் நிறுவனம் ரீ-ட்வீட் செய்திருந்தது. இதனால் கடுப்பான அஜித் ரசிகர்கள், ‘தரங்கெட்ட ஏஜிஎஸ்’, ‘சுயநலவாதி வெங்கட்பிரபு’ என்ற ஹேஷ்டேக்குகளை டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து வந்தனர். தொடர்ந்து வெங்கட் பிரபுவை தல ரசிகர்கள் பங்கம் செய்து வந்த நிலையில், அவருக்கு அஜித்திடம் இருந்து குட் நியூஸ் சென்றுள்ளது. அதாவது கோட் படம் வெளியான பின்னர் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பேசியுள்ளாராம் அஜித். 

மேலும் படிக்க - வாழை ஒரு ஆபாச படம்..” மாரி செல்வராஜ்ஜை விமர்சித்த சாரு நிவேதிதா!

அப்போது “டேய் படம் நல்லா போகுதுன்னு கேள்விப்பட்டேன் டா, வாழ்த்துகள்” என வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார் அஜித். இதனால் வெங்கட் பிரபு ரொம்பவே மகிழ்ச்சியடைந்துள்ளார். கோட் படத்துக்கு எதிராக அஜித் ரசிகர்கள் தொடர்ந்து நெகட்டிவாக பப்ளிசிட்டி செய்து வருகின்றனர். ஆனால், அதுகுறித்து எதையும் கண்டுகொள்ளாத அஜித், வெங்கட் பிரபுவை மனம் திறந்து பாராட்டியுள்ளார். இது வெங்கட் பிரபுவுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அஜித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரை வெங்கட் பிரபு நேரில் சென்று சந்தித்ததோடு, அவரது செல்போனுக்கு கால் செய்த விஜய், அஜித்திடம் நலம் விசாரித்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கோட் படத்தின் வெற்றி விழா எப்போது நடைபெறும் என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். படம் வெளியாகும் முன்னர் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் க்ரீன் சிக்னல் கொடுக்காததால், பிரஸ் மீட் கூட நடைபெறாமல் கோட் படத்தை வெளியிட்டது படக்குழு. இப்போது கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனால் லியோ பட பாணியில் கோட் வெற்றி விழா எப்போது நடக்கும் என விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக காத்திருக்கின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow