Kerala Youth Arrest : ”வந்தான், பேசுனான், போனான், ரிப்பீட்டு..” கேரளாவில் இருந்து காதலியை பார்க்க வந்த இளைஞர் செய்த அட்ராசிட்டி

 கேரளாவில் இருந்து தன்னை பார்க்க சென்னைக்கு வந்த இளைஞரை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறி மறுத்துள்ளார் இளம்பெண். இதனையடுத்து ’ஊருக்கு போறேன்’ என கூறி ஊருக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் காதலி அலுவலகத்திற்கு சென்று இளைஞர் பிரச்சனை செய்ததால் பரபரப்பு. இறுதியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் ஆத்திரத்தில் டெம்போ ட்ராவலரை திருடியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Aug 25, 2024 - 11:10
Aug 25, 2024 - 11:33
 0
Kerala Youth Arrest : ”வந்தான், பேசுனான், போனான், ரிப்பீட்டு..” கேரளாவில் இருந்து காதலியை பார்க்க வந்த இளைஞர் செய்த அட்ராசிட்டி
Kerala Youth Arrested in Chennai

கேரளாவில் இருந்து தன்னை பார்க்க சென்னைக்கு வந்த இளைஞரை திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறி மறுத்துள்ளார் இளம்பெண். இதனையடுத்து ’ஊருக்கு போறேன்’ என கூறி ஊருக்கு செல்லாமல் மீண்டும் மீண்டும் காதலி அலுவலகத்திற்கு சென்று இளைஞர் பிரச்சனை செய்ததால் பரபரப்பு. இறுதியில் என்ன செய்கிறோம் என்று அறியாமல் ஆத்திரத்தில் டெம்போ ட்ராவலரை திருடியதால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Kerala Youth Arrested in Chennai : கொரட்டூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர், டெம்போ ட்ராவலர் லோடு வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 22ம் தேதி அண்ணா நகர் 6-வது அவென்யூவில் ஒரு பேக்கரியில் சரக்கு இறக்கி வைத்து விட்டு வந்து பார்த்தபோது டெம்போ ட்ராவலர் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

டெம்போ ட்ராவலர் காணாமல் போன சம்பவம் குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் கல்யாணசுந்தரம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்த போது டெம்போ ட்ராவலர் சென்னை விமான நிலையம் அருகே சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. டெம்போ ட்ராவலரை பறிமுதல் செய்த அண்ணா நகர் போலீசார், வாகனத்தை திருடி சென்ற நபர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அண்ணாநகர் பகுதியில் சுற்றித்திரிந்த இளஞரை அழைத்து வந்து விசாரணை செய்ததில் அந்த இளைஞர் தான் டெம்போ ட்ராவலரை திருடி சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் கேரளாவைச் சேர்ந்த அப்துல் ஜலில்(28) என்பது தெரிய வந்தது. Btech பட்டதாரியான இவர், கேரளாவில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

முகநூல் வழியாக சில மாதங்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அப்துல் ஜலீலுக்கு பழக்கமாகியுள்ளார். பின்னர் இருவரும் நண்பர்களாக மாறி பின் காதலித்து வந்ததாக கைது செய்யப்பட்ட அப்துல் ஜலீல் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சில தினங்களுக்கு முன் கேரளாவில் இருந்து தனது காதலியை பார்ப்பதற்காக சென்னை அண்ணா நகருக்கு வந்த அவர், இளம்பெண் பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதாகவும் ஆனால், இளம் பெண் இதனை மறுத்தால் ஆத்திரத்தில் அலுவலகத்தில் வைத்தே இளம் பெண்ணிடம் சண்டையிட்டுள்ளார்.  இதனையடுத்து அலுவலக ஊழியர்கள் அவரைப் பிடித்து அவரது பெற்றோர் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவரது பெற்றோர்கள் கூறியபடி வாடகை காரில் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த இளைஞர் செங்கல்பட்டு அருகே வாடகை காரில் இருந்து சிறுநீர் கழிப்பதாக கூறி, வாகனத்தை விட்டு இறங்கிவிட்டு. பின் அங்கிருந்து லிப்ட் கேட்டு சென்னை அண்ணாநகர் வந்தடைந்து மீண்டும் இளம் பெண்ணிடம் பேசியுள்ளார்.

அந்தப் பெண் முடியாது எனக் கூற, இதனால் சாலை வழியே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு சாலையின் ஓரத்தில் டெம்போ ட்ராவலர் இருப்பதை கண்டுள்ளார்.

பின்னர், சாவியுடன் இருந்த டெம்போ ட்ராவலரை திருடிக் கொண்டு கேரளா செல்வதற்காக புறப்பட்ட அப்துல் ஜலில் தேனாம்பேட்டை, தி.நகர் பகுதி வழியாக சென்று விமான நிலையம் சென்று, அங்கு சாலையின் ஓரத்தில் டெம்போ ட்ராவலரை நிறுத்திவிட்டு மீண்டும் இளம் பெண்ணிடம் பேசுவதற்காக பேருந்து மூலம் சென்னை அண்ணாநகர் வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக விமான நிலையத்திலிருந்து பேருந்து ஏறிய அப்துல் ஜலீல் தன்னிடம் பேருந்து டிக்கெட்டிற்கு பணம் இல்லை என்பதால் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண்ணிடம் தன்னிடம் பணம் இல்லை தனக்கு டிக்கெட் எடுத்து தாருங்கள் எனக் கூறி அதன் பேரில் அண்ணா நகர் வந்ததும் தெரியவந்தது.

மேலும் படிக்க: ஏற்றப்பட்டது இங்கிலாந்து பாரா ஒலிம்பிக் தொடர் ஓட்ட ஜோதி

போலீசார் விசாரணை செய்தபோது மொபைல் போனில் இருந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை காட்டி தன்னையும் தனது காதலியையும் சேர்த்து வையுங்கள் எனக்கூறி கதறி அழுதுள்ளார் ஜலீல். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அப்துல் ஜலீலை போலீசார் சிறையில் அடைத்தனர்.
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow