கோட் கொண்டாட்டம்.. தவெக கொடியோடு வந்த ரசிகர்கள்.. ஆட்டம் பாட்டம் அமர்களம்

GOAT release celebrations: கோட் திரைப்பட ரீலிஸ் கொண்டாட்டத்தின்போது தமிழக வெற்றிக்கழக கொடியை பயன்படுத்த வேண்டாம் என விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் சில ரசிகர்கள் கொடியோடு வந்து ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்தினர்.

Sep 5, 2024 - 10:03
Sep 5, 2024 - 17:29
 0
கோட் கொண்டாட்டம்.. தவெக கொடியோடு வந்த ரசிகர்கள்.. ஆட்டம் பாட்டம் அமர்களம்
goat movie tvk flag

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் வெளியாகும் முதல் படம் என்பதால் பிரம்மாண்ட படம் என்பதால் கோட் திரைப்படத்திற்கு ரசிகர்களிடையேயும், பொதுமக்களிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ள தியேட்டர் வாசல்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளன. தவெக கொடியோடு வந்த சில ரசிகர்கள் கோட் படத்தை தங்களுடைய வீட்டு விசேஷம் போல கொண்டாடி வருகின்றனர்.  

ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ’கோட்’. இன்றைய தினம் (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் கோட் படம்தான் தனது கடைசி படம் என்று முன்பு கூறினார். இதனால் கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு  அதிகரித்துள்ளது. 

தமிழ்நாட்டில் மட்டும் 700க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளது. தியேட்டர் வாசல்களில் காலை முதலே ரசிகர்கள் மேள தாளம் முழங்க நடனமாடி கொண்டாடி வருகின்றனர்.  கோட் திரைப்பட ரீலிஸ் கொண்டாட்டத்தின் போது த.வெ.க கொடியை பயன்படுத்த வேண்டாம் என விஜய் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் வெளியாகும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று‌ம், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் படத்தை கொண்டாட வேண்டும் என்றும் விஜய் வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தியேட்டர் வாசல்களில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திருவிழா போல ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் எல்லாம் மேள தாளம் முழங்க கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. ஒரு சில ரசிகர்கள் தவெக கொடியோடு வந்து கொண்டாடி வருகின்றனர். விஜய் சொன்னது போல அதிக ஆர்பாட்டம் இன்றி பொதுமக்களுக்கு பாதிப்பு இன்றி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow