''ரேசன் கடையில் இனி தேங்காய் எண்ணெய்?''.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!
''தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் பேர் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை தயாராக உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பரிசளித்து தகுதியானவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
சென்னை: சென்னை அண்ணா நகரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன மயமாக்கப்பட்ட அமுதம் மக்கள் அங்காடி, இரண்டு அமுதம் நியாய விலைக்கடை கட்டடங்களை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, ‘’சட்டப்பேரவை மானிய கோரிக்கையில் 100 அமுதம் அங்காடி தொடங்குவோம் என்று கூறினோம்.
அதன் அடிப்படையில் அண்ணா நகரில் புதிய மேம்படுத்தப்பட்ட அங்காடியை திறந்துள்ளோம். ஏற்கனவே கோபாலபுரத்தில் வைக்கபட்ட அமுதம் அங்காடியில் சிறப்பான முறையில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. விரைவில் கொளத்தூரிலும் காஞ்சிபுத்திலும் அமுதம் அங்காடிகளை திறக்க உள்ளோம் .அமுதம் அங்காடியில் இருந்து வீடு வீடாகப் பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தயாநிதி மாறன் கோரிக்கை வைத்துள்ளார். அதை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்போம்’’ என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி ‘’தமிழ்நாடு முழுவதும் 3 லட்சம் பேர் குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பித்துள்ளனர். அதில் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டை தயாராக உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பரிசளித்து தகுதியானவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படும். திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 17 லட்சத்து 30,000 பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் சென்ற ஆகஸ்ட் வரை 37 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர், தேர்தல் அறிக்கையில் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் தருவதாக கூறினோம். தற்போது பின்டாலுக்கு 2,450 ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல் கொள்முதல் விலையை சொன்னபடி முதல்வர் உயர்த்தியுள்ளார் என்றார்.
ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட இரு மடங்கு பொருட்களை பறிமுதல் செய்துள்ளார்கள். வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். அப்போது ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்தான ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து மற்ற கடைகளை ஒப்பிடும்போது அமுதம் அங்காடியில் விலை குறைவாக இருக்கும். லாப நோக்கமின்றி விலைவாசியை கட்டுப்படுத்த அமுதம் அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளது. 100 அங்காடிகள் மட்டுமின்றி மக்களின் வரவேற்பினை பொறுத்து மேலும் அமுதம் அங்காடிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி பேசியுள்ளார்.
What's Your Reaction?