Coolie: ”ரஜினிக்காக மட்டும் தான் ஓக்கே சொன்னேன்..” லோகேஷுக்கு தக் லைஃப் கொடுத்த பிரபல ஹீரோ!

சூப்பர் ஸ்டார் ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில், கன்னட நடிகர் உபேந்திராவும் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கமிட்டானது குறித்து உபேந்திரா மனம் திறந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Sep 12, 2024 - 21:55
 0
Coolie: ”ரஜினிக்காக மட்டும் தான் ஓக்கே சொன்னேன்..” லோகேஷுக்கு தக் லைஃப் கொடுத்த பிரபல ஹீரோ!
கூலி படத்தில் இணைந்தது குறித்து மனம் திறந்த உபேந்திரா

சென்னை: ஜெயிலர், லால் சலாம், வேட்டையனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் டைட்டில் டீசரை வெளியிட்ட படக்குழு, சமீபத்தில் கூலியில் நடிக்கும் நடிகர்களின் போஸ்டரையும் வெளியிட்டது. அதன்படி, மலையாளத்தில் இருந்து செளபின் சாஹிர், தெலுங்கு ஹீரோ நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் ஆகியோர் நடிப்பதாக அறிவித்தது.

அதுமட்டுமில்லாமல் அனைவரது கேரக்டர்களின் பெயரையும் படக்குழு வெளியிட்டது. அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினி தேவா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் கூலி படத்தில் மிக முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை மட்டும் சஸ்பென்ஸாக வைத்திருக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்நிலையில், கூலி படத்தில் நடிப்பது குறித்து கன்னட நடிகர் உபேந்திரா மனம் திறந்துள்ளார். 

சமீபத்தில் கன்னட யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்த உபேந்திரா, ரஜினிக்காக மட்டுமே கூலி படத்தில் கமிட்டானதாகக் கூறியுள்ளார். அதாவது சில தினங்களுக்கு முன்னர் சென்னைக்கு வந்திருந்த போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னை நேரில் சந்தித்தார். அப்போது கூலி படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டதோடு, அதன் கதையையும் சொல்ல ஆரம்பித்தார். ஆனால், எனக்கு ஒன்லைன் மட்டும் போதும், மற்றபடி கதை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, நான் நடிக்கிறேன் என சொல்லிவிட்டேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க இப்படியொரு சான்ஸ் கிடைக்கும் போது அதனை மிஸ் செய்ய முடியாது. அதனால் எனக்கு கதை முக்கியமில்லை என லோகேஷை திருப்பி அனுப்பிவிட்டாராம். இப்படித்தான் கூலி படத்தில் தான் கமிட்டானதாக அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் உபேந்திரா. இந்த வீடியோ ரஜினி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. கூலி படத்தில் கலீஷா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் உபேந்திரா. இவரது கேரக்டருக்கு கதையில் ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.

மேலும் படிக்க - இதுக்காக தான் மேரேஜ் பண்ணல... மனம் திறந்த எஸ்ஜே சூர்யா!

அதேபோல், கூலி படத்தில் ரஜினி – நகர்ஜுனா இடையேயான காட்சிகளில் அனல் பறக்கும் என சொல்லப்படுகிறது. ஆக்ஷன் மோடில் இருக்கும் இந்த சீன்களில், விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டர் ரெஃபரன்ஸ் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow