SJ Suryah: “இதுக்காக தான் மேரேஜ் பண்ணல... அது என்னோட போகட்டும்..” மனம் திறந்த எஸ்ஜே சூர்யா!
இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சுலராக வாழ்ந்து வருவது குறித்து எஸ்ஜே சூர்யா மனம் திறந்துள்ளார்.
சென்னை: அஜித் நடித்த வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. முதல் படத்திலேயே கோலிவுட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த இவர், தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார். அஜித்தை முதன்முறையாக ஆன்டி ஹீரோ கேரக்டரில் நடிக்க வைத்து மெர்சல் காட்டியிருந்தார். அடுத்து விஜய், ஜோதிகா நடித்த குஷி படத்தை இயக்கி, அதையும் சூப்பர் ஹிட்டாக்கினார். இந்தப் படத்தில் காதலர்களுக்கு இடையே இருக்கும் ஈகோவை க்யூட்டாக காட்டியிருந்தார் எஸ்ஜே சூர்யா.
அதன்பின்னர் நியூ, அன்பே ஆரூயிரே படங்களை இயக்கிய எஸ்ஜே சூர்யா, அதில் அவரே ஹீரோவாக நடித்தார். டைரக்டர் டூ ஹீரோ கனவில் பயணிக்கத் தொடங்கிய எஸ்ஜே சூர்யாவுக்கு, ஆரம்பத்தில் பெரிதாக ரீச் கிடைக்கவில்லை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக எஸ்ஜே சூர்யா இல்லாத படமே இல்லை என்பது போல மாறிவிட்டது. கோலிவுட், டோலிவுட் என இரண்டு பக்கம் மிரட்டலான வில்லத்தனம் காட்டி நடித்து வருகிறார் எஸ்ஜே சூர்யா. இதனால் தற்போது எஸ்ஜே சூர்யாவின் காட்டில் அடை மழை என்றுதான் சொல்ல வேண்டும்.
சினிமாவில் மாஸ் காட்டும் எஸ்ஜே சூர்யா, தனிப்பட்ட வாழ்வில் இன்னும் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். 55 வயதை கடந்துவிட்ட எஸ்ஜே சூர்யா, இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சில வருடங்களுக்கு முன் பேசியிருந்த அவர், காதல், திருமணம் எல்லாம் சூப்பரான ஃபீலிங். நம்மால் அதில் உண்மையாக இருக்க முடியவில்லை என்றால், அதில் கமிட்டாகக் கூடாது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் தனது திருமணம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் எஸ்ஜே சூர்யா. அதாவது, சினிமாவில் சந்திக்கும் தோல்விகளுக்கு பயந்து தான் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருப்பதாகக் கூறியுள்ளார். சினிமா மட்டுமே என் வாழ்க்கை என முடிவு செய்துவிட்டேன். ஆனால், இங்கே வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். இதில் வெற்றியோ தோல்வியோ அது என்னோடு போகட்டும், இதுவே எனக்கு குடும்பம் இருந்தால், நான் அவர்களையும் பார்த்துக்க வேண்டியது இருக்கும் என மனம் திறந்துள்ளார் எஸ்ஜே சூர்யா.
மேலும் படிக்க - விஜய்யின் தளபதி 69 லேட்டஸ்ட் அப்டேட்!
வாலி, குஷி, நியூ என தனது படங்களில் காதலின் இன்னொரு வெர்ஷனை காட்டிய எஸ்ஜே சூர்யா, நிஜ வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என முடிவு செய்துள்ளது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
What's Your Reaction?