Thalapathy 69: அதிரி புதிரியாக ரெடியாகும் தளபதி 69 அப்டேட்ஸ்... அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்!

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கவுள்ள தளபதி 69 படத்தின் அபிஸியல் அப்டேட்ஸ் விரைவில் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sep 12, 2024 - 20:42
 0
Thalapathy 69: அதிரி புதிரியாக ரெடியாகும் தளபதி 69 அப்டேட்ஸ்... அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்!
விரைவில் தளபதி 69 அப்டேட்

சென்னை: விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம், கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம், இதுவரை 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கோட் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கோட்-ஐ தொடர்ந்து தனது கடைசிப் படத்திற்கு ரெடியாகிவிட்டார் விஜய். சினிமாவில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கவுள்ள விஜய், கடைசியாக தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ளது உறுதியாகிவிட்டது.

கோட் ரிலீஸுக்கு முன்பே தளபதி 69 அபிஸியல் அப்டேட் வெளியாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த வாரம் அல்லது இம்மாதம் இறுதிக்குள் தளபதி 69 அபிஸியல் அப்டேட் வெளியாகவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் தெறி பட ஸ்டைலில் தரமான ஆக்ஷன் மூவியாக உருவாகவுள்ளதாம் தளபதி 69. இதுபற்றி இயக்குநர் ஹெச் வினோத் ஏற்கனவே அப்டேட் கொடுத்திருந்தார். அதாவது தளபதி 69 கண்டிப்பாக பொலிட்டிக்கல் ஜானரில் இருக்காது எனவும், இது அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான கமர்சியல் டைப் படம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தளபதி 69 படத்தில் விஜய்யுடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, விஜய்யுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் – மோகன்லால் இருவரும் ஜில்லா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதனையடுத்து இப்போது தளபதி 69 படத்திலும் விஜய், மோகன்லால் காம்போ மிரட்டவுள்ளனர். அதேபோல், இன்னொரு முக்கியமான கேரக்டரில் விஜய்யின் ஆல்டைம் ஃபேவரைட் ஜோடியான சிம்ரன் நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

கோட் படத்தில் விஜய்யுடன் சினேகா நடித்ததைப் போல, தளபதி 69-ல் சிம்ரனை கமிட் செய்துள்ளதாம் படக்குழு. மேலும் பிரேமலு நாயகி மமிதா பைஜு விஜய்க்கு தங்கையாக நடிக்க கமிட்டாகிவுள்ளார். அதேபோல், இசையமைப்பாளர் அனிருத் என்பதும் கன்ஃபார்ம் ஆகிவிட்டது. அனிருத்தை தொடர்ந்து டெக்னிக்கல் டீமையும் ரொம்பவே ஸ்ட்ராங்காக செலக்ட் செய்து வருகிறார் ஹெச் வினோத். எடிட்டராக பிரதீப் ராகவ், சினிமோட்டோகிராபிக்கு சத்யன் சூரியன் ஆகியோரும் கமிட்டாகியுள்ளனர். இவர்களுடன் இன்னும் சில முக்கியமான பிரபலங்கள் தளபதி 69-ல் இணைந்துள்ளனர்.      

மேலும் படிக்க - இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ்கள் லிஸ்ட்

இதுபற்றிய அப்டேட்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படப்பிடிப்பு குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தளபதி 69 ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரம் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இந்தப் படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிடவும் படக்குழு பிளான் செய்து வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow