இஷ்டபடி ரீல் சுற்றிய மகா விஷ்ணு.. சொன்னது ஒன்று செய்தது ஒன்று
தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் மத்தியில் என்ன பேச வேண்டும் என்று சொல்லியதற்கு மாறாக உளறித் தள்ளியதே சர்ச்சைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
மாணவர்களின் அறிவுக்கும் வயதுக்கும் ஏற்றவாறு பேச வேண்டும் என தலைமையாசிரியை வேண்டுகோள் வைத்தும் தான் ஏற்கனவே திட்டமிட்டு வந்தபடி மறு ஜென்மம் முன் ஜென்மம் என மூடநம்பிக்கை கருத்துக்களை பேசியுள்ளார்
சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் அரசு பள்ளிகளில் தன்னம்பிக்கை வளர்ந்தால் போதனை என்கிற பெயரில் மூடநம்பிக்கை சார்ந்த கருத்துக்களை மகா விஷ்ணு என்கின்ற நபர் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது
கடந்த மாத இறுதியில் மாணவர்கள் மத்தியில் இவரது நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுள்ளது மாணவிகள் மத்தியில் உரை நிகழ்த்துவதற்கு முன்பு மகாவிஷ்ணு தலைமை ஆசிரியை சந்தித்து பேசும் காணொளி வெளியாகியுள்ளது.
அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியையாக இருந்த தமிழரசி, மகாவிஷ்ணுவிடம் மாணவிகள் மத்தியில் என்ன பேச போகிறீர்கள் என கேட்கிறார்?? நான் என்ன வேண்டுமானாலும் பேசுவேன், நீங்கள் மாணவிகள் மத்தியில், எதை பேச வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என மகாவிஷ்ணு தலைமை ஆசிரியையிடம் திரும்பி கேட்கிறார்.
அதற்கு தலைமை ஆசிரியை தமிழரசி மாணவிகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவர்களின் வயதுக்கு ஏற்றவாறு பேசினால் நன்றாக இருக்கும் என்கின்ற அடிப்படையில் பதில் அளிக்கிறார்.
இவ்வாறு என்ன பேச வேண்டும் என தலைமை ஆசிரியையிடம் கேட்டுவிட்டு அதற்குரிய விளக்கத்தினையும் பெற்றுவிட்டு அதற்கு முற்றிலும் மாறாக முன் ஜென்மம் மறு ஜென்மம் என மாணவிகளின் தன்னம்பிக்கை வளர்ப்பதற்கு சற்றும் தொடர்பில்லாதவற்றை உளறித் தள்ளியுள்ளார் மகாவிஷ்ணு.
இதன் காரணமாகவே தற்போது அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி சர்ச்சையாக மாறி இருக்கின்றது. மாணவிகளுக்கு தன்னம்பிக்கையையும் அறிவையும் ஊட்டுவதாக சொல்லிவிட்டு தன் மனதிற்கு தோன்றவற்றையெல்லாம் இஷ்டப்படி மகாவிஷ்ணு ரீல் சுற்றியதே தற்போது பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது.
What's Your Reaction?