போதைப் பொருள் ஒழிப்பு நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த போலீசார், சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல மால் அருகே வைத்து மெத்தபட்டமைன் போதை பொருள் வாங்க வந்த ஒரு இளம்பெண்ணை சுற்றி வளைத்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் மெத்தப்பட்டமைன் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில். கைது செய்யப்பட்ட பெண் மேடவாக்கம் கண்ணதாசன் தெருவை சேர்ந்த 27 வயதான எஸ்தர் என்ற மீனா என்பதும், இவர் சினிமா மற்றும் சீரியல்களில் துணை நடிகையாக இருந்து வருவதும் தெரிய வந்தது.
சினிமா நட்சத்திரங்கள் பங்குக்கொண்ட பார்ட்டி மற்றும் பஃப்பிற்கு செல்லும் போது, போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாக துணை நடிகை மீனா தெரிவித்தார். மேலும், நண்பர்களிடம் இருந்து, போதை பொருள் சப்ளை செய்யும் முக்கிய நபரின் அறிமுகம் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைது செய்த துணை நடிகை மீனா கொடுத்த தகவலின் அடிப்படையில் ஐடி கம்பெணிகள் அருகே மெத்தபெட்டமைன் விற்பணை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 6 கிராம் மெத்தபெட்டமைன், 10-MDM மாத்திரைகள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
துணை நடிகை மீனா கொடுத்த தகவலின் பெயரில் சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவனம் அருகே மெத்தம்பெட்டமைன் என்கிற போதை பொருட்களை ஐடி ஊழியர்ளுக்கு விற்பணை செய்து வருவதாக துரைப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது,
தகவலின் படி அப்பகுதிகளில் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் வெகுநேரமாக ஒரே இடத்தில் நின்றிருந்த ஒரு நபரை சுற்றி வளைத்து பிடித்து அவரை சோதனை செய்ததில், அவரது பேண்ட் பாக்கெட்டில் 6 கிராம் மெத்தபெட்டமைன் இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் திருமங்களம் பகுதியை சேர்ந்த, லோகேஷ் (24) என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில் லோகேஷுடன் சேர்ந்து அதே பகுதிகளில் தேவேந்திரன் (27), ராஜேஷ் (24), ஆலன் கிரிகெரி (25) ஆகியோர் போதை பொருட்கள் விற்பணை செய்துவந்தது தெறியவந்தது. உடனடியாக துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் தனிப்படை போலிசார் மூன்று பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.