ஆம்ஸ்ட்ராங் கொலை: மூளையாக செயல்பட்ட கட்சி பிரமுகர்கள்.. விசாரிக்க கோரி மனு

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் விசாரணை செய்யப்படவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Sep 17, 2024 - 15:22
Sep 17, 2024 - 15:28
 0
ஆம்ஸ்ட்ராங் கொலை: மூளையாக செயல்பட்ட கட்சி பிரமுகர்கள்.. விசாரிக்க கோரி மனு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது போலீசாரை தாக்கி தப்பிச் செல்ல முயற்சித்த திருவேங்கடம் என்ற ரவுடியை தற்காப்புக்காக போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது வரை சுமார் 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும், அவரது நண்பருமான பிரபல ரவுடி சஜித் தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான தனிப்படை போலீசாரால் கைது செய்தனர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட வழக்கறிஞர் அருள், பொண்ணை பாலு, ராமு, திருமலை, மணிவண்ணன், சந்தோஷ், செல்வராஜ் உள்பட உள்பட 10 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முதலமைச்சரின் தனிச் செயலாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின், மாநிலப் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியுள்ள ஜெய்சங்கர், “ஆம்ஸ்ட்ராங் கொலையில் மூளையாக செயல்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் இன்னும் விசாரணை செய்யப்படவில்லை. மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை

எனவே இந்த கொலையில் தொடர்புடைய அரசியல் கட்சி பிரமுகர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த இரண்டு கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு அளிக்க நேரம் அளிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இதனால் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow