Vijayakanth Birth Anniversary : இனி "கேப்டன் ஆலயம்".. பெயர் மாற்றம் பெற்ற தேமுதிக தலைமை அலுவலகம்

Vijayakanth Birth Anniversary : மறைந்த விஜயகாந்தின் 72வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்த  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகம் இனி "கேப்டன் ஆலயம்" என அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

Aug 25, 2024 - 13:23
Aug 25, 2024 - 16:22
 0
Vijayakanth Birth Anniversary : இனி "கேப்டன் ஆலயம்".. பெயர் மாற்றம் பெற்ற தேமுதிக தலைமை அலுவலகம்
விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது குடும்பத்தினருடன் மரியாதை

மறைந்த விஜயகாந்தின் 72வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலையை திறந்து வைத்த  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகம் இனி "கேப்டன் ஆலயம்" என அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

Vijayakanth Birth Anniversary : சினிமா நடிகர்களாக இருந்து நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வரிசையில்  மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தமிழக அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து கொடுக்கப்பட்டவர் இதுவரை விஜயகாந்த் ஒருவர் மட்டும்தான்.

தி.மு.க. - அ.தி.மு.க. என்று இரு திராவிட கட்சிகள் மட்டுமே வலுவாக இருந்த தமிழகத்தில், விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், 2006ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று மூன்றாவது வலுவான இயக்கமாக கால் ஊன்றியது. தெய்வத்தோடும், மக்களோடும் தான் கூட்டணி என அறிவித்து தனியாகப் போட்டியிட்ட அந்த தேர்தலில், கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னர் அரசியலில் விஜயகாந்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது என்றே சொல்லலாம். ஆனாலும் தொடக்கத்தில் சுமுகமாகச் சென்று கொண்டிருந்த அதிமுக - தேமுதிக கூட்டணிக்குள் ஏற்பட்ட சலசலப்பு, முதலமைச்சர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்தும் கடுமையாக மோதிக் கொள்ளும் நிலைக்கு கொண்டு செல்ல, கூட்டணி முறிந்தது. அதுமட்டுமின்றி தே.மு.தி.கவின் எம்.எல்.ஏக்களையும், ஜெயலலிதா தன் பக்கம் இழுக்கத் தொடங்கினார். திமுகவும் தன் பங்குக்கு தேமுதிக எம்.எல்.ஏக்களை இழுத்துக் கொண்டது.

இதன் பின்னர்தான் தேமுதிகவின் சரிவும் தொடங்கியது. இதற்கு காரணம் அரசியல் அரங்கில் விஜயகாந்த எடுத்த தவறான முடிவுகள் தான் என்று இன்றுவரை கூறப்படுகிறது. 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தங்களோடு விஜயகாந்த் வந்துவிடுவார் என திமுக எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அவரோ பா.ஜ.கவுடன் கூட்டணி போட்டுக் கொண்டார். ஆனால் தேமுதிக தோல்வியையே சந்தித்தது. இதே போல் 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைமையில் மக்கள் நலக்கூட்டணியை அமைத்து போட்டியிட்டதும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் தேமுதிமுகவின் வாக்கு வங்கி சரிய, உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து கேப்டன் விஜயகாந்த் சற்று விலகி இருக்க,  எந்த வேகத்தில் தேமுதிக உச்சத்தை எட்டடியதோ, அதே வேகத்தில் சரிவயையும் சந்தித்தது என்பதே உண்மை. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விஜயகாந்த மறைய தற்போது பிரமலதா விஜயகாந்த் தலைமையில், இயங்கி வரும் தேமுதிக 2024-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் களம் கண்டது. கடுமையான போராட்டத்திற்கு பின்னரும் பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுக்கு இன்னும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. 

இந்நிலையில், தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது குடும்பத்தினருடன் சென்று மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் சிலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய அவர் பிரேமலதா விஜயகாந்த், இன்று முதல் தேமுதிக தலைமை அலுவலகத்தின் பெயர் கேப்டன் ஆலயம் என அழைக்கப்படும் என்று கூறினார். மேலும், விஜயகாந்த் பிறந்தநாள் தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக  கொண்டாட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: டிராவிட்டின் சாதனையை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்.. சச்சினின் சாதனையை முறியடிப்பாரா?..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow