Sitharam Yechury: தீவிர சிகிச்சைப் பிரிவில் சீதாராம் யெச்சூரி.. என்ன ஆச்சு..?
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீதாராம் யெச்சூரி 1952ம் ஆண்டில் சென்னையில் பிறந்தவர். இவரது தாய்மொழி தெலுங்கு. அவரது தந்தை சர்வேஸ்வர சோமயாஜுலா யெச்சூரி மற்றும் தாயார் கல்பாகம் யெச்சூரி ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவைச் சேர்ந்தவர்கள் . ஹைதராபாத்தில் வளர்ந்த அவர் பத்தாம் வகுப்பு வரை அங்குள்ள ஆல் செயிண்ட்ஸ் உயர்நிலை பள்ளியில் படித்தார். பிறகு டெல்லியில் உள்ள பிரசிடென்சி எஸ்டேட் பள்ளியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் BA (Hons) மற்றும் ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் MA படித்தார். பிறகு பி.எச்.டி-க்காக ஜே.என்.யூ-வில் சேர்ந்தபோது எமர்ஜென்சியால் கைது செய்யப்பட்டதால் அதை பாதியிலேயே நிறுத்தினார்.
பிறகு 1974ம் ஆண்டில் இந்திய மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்தார் யெச்சூரி. தன்னுடைய மாணவப் பருவத்திலேயே அரசியல் ஆர்வம் கொண்ட இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காக 1970களில் இருந்தே பணியாற்றி வருகிறார் சீதாராம் யெச்சூரி. சிபிஎம்-ல் தற்போது பொதுச்செயலாளராக இருக்கும் இவர் 2015ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3வது முறையாக அக்கட்சியின் பொது செயலாளராக இருந்து வருகிறார். இவருடைய வயது 72 என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு, உதவி ஆய்வாளர் படுகொலை.. இரண்டையும் நடத்தியது ஒரே கும்பலா?
இந்நிலையில், அவருக்கு தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், அவருக்கு நுறையீரல் தொற்று மோசமாக உள்ளதை தெரிந்துக்கொண்டனர். இதனால் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சீதாராம் யெச்சூரி.
அவர் தீவிர மருத்துவ பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், சீதாராம் யெச்சூரிக்கு பயப்படும் படி எதுவும் இல்லை எனவும், அவர் நலமாக உள்ளார் எனவும் சிபிஎம் கட்சி தெரிவித்துள்ளது.
What's Your Reaction?