'எனது குடும்பம் நாசமாக போக வேண்டும்'.. கற்பூரம் ஏற்றி சபதம் எடுத்த கருணாகர ரெட்டி!

திருப்பதி கோயிலின் புனிதத்தன்மையை களங்கப்படுத்தி, மக்களின் உணவுர்களை புண்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை கருணாகர ரெட்டி மறுத்து வந்தார்.

Sep 23, 2024 - 20:44
Sep 23, 2024 - 20:48
 0
'எனது  குடும்பம் நாசமாக போக வேண்டும்'.. கற்பூரம் ஏற்றி சபதம் எடுத்த கருணாகர ரெட்டி!
Karunakara Reddy

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. சுவாமி ஏழுமலையானை போன்று மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக வெளியான ஆய்வறிக்கை நாடு முழுவதும் பேசும் பொருளாகியுள்ளது. திருப்பதி லட்டுகள் செய்ய பயன்படுத்தும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திராபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அறிக்கையில் கூறியுள்ளது. 

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் தான் திருப்பதி லட்டுவில் இந்த முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சந்திரபாபு நாயுடு இந்த குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், இப்போது பூதாகரமாக வெளிவந்துள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர ரெட்டி இருந்தார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை இழந்தவுடன் கருணாகர ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். 

’’கருணாகர ரெட்டி அறங்காவலர் குழு தலைவராக இருந்தபோது லட்டுகளில் விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தெரிந்திருந்தும் கருணாகர ரெட்டி அப்போது எந்த புகாரையும் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு  கருணாகர ரெட்டி உடந்தையாக இருந்துள்ளார்’’ என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். 

திருப்பதி கோயிலின் புனிதத்தன்மையை களங்கப்படுத்தி, மக்களின் உணவுர்களை புண்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை கருணாகர ரெட்டி மறுத்து வந்தார். லட்டு விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கருணாகர ரெட்டி திருப்பதி கோயிலில் சூடமேற்றி சபதம் செய்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த அவர் கோயில் குளத்தில் மூழ்கி ஈர உடையுடன் கோயில் எதிரே திடீரென தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி, ‘’உனது நைவேத்தியம் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்து இருந்தால் நானும் எனது குடும்பமும் சர்வ நாசமாக போக வேண்டும்’’என்று சபதம் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீசார், கருணாகர ரெட்டியை அங்கு இருந்து அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow