Amazon: அலுவலகத்தை மாற்றும் அமேசான் நிறுவனம் .. சிரமத்தில் பணியாளர்கள்.. !

அமேசான் இந்தியா தனது நிறுவனத்தின் தலைமையகத்தை பெங்களூருவில் உலக வர்த்தக மையத்திருந்து (WTC) விமான நிலையத்திற்கு அருகில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Nov 20, 2024 - 23:25
 0
Amazon: அலுவலகத்தை மாற்றும் அமேசான் நிறுவனம் .. சிரமத்தில் பணியாளர்கள்.. !
அமேசான்

அமேசான் இந்தியா தனது நிறுவன தலைமையகத்தை வடமேற்கு பெங்களூருவில் பிரிகேட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான உலக வர்த்தக மையத்தில் (WTC) இருந்து, பெங்களூரு நகரின் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள புதிய இடத்திற்கு மாற்ற உள்ளது.  இந்த மாற்றம் நிர்வாக செலவைக் குறைக்கும் நோக்கில்,  உலக வர்த்தக மையத்தில் மொத்தமுள்ள 18 தளங்களில் 5,00,000 சதுர அடி அளவுள்ள பிரீமியம் அலுவலக இடத்தை காலி செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.

உலக வர்த்தக மையத்தில் தற்போது சதுர அடிக்கு ரூ.250 அமேசான் செலுத்தி வந்த நிலையில், புதிதாக மாறவுள்ள இடத்தின் வாடகை இதைவிட மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தின் இடமாற்றம் ஏப்ரல் 2025 ஆம் ஆண்டு தொடங்கி ஏப்ரல் 2026 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திடீரென அமேசான் நிறுவனம் இடமாற்றம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், தற்போது அமேசான் நிறுவனம் செயல்படும் கட்டிடம் விரைவில் காலியாக உள்ளது. மேலும், தற்போது இயங்கும் நிறுவனத்தின் அருகில், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகம், மருத்துவமனை, பள்ளி மற்றும் ஹோட்டலை ஆகியவை உள்ளடக்கிய பகுதிகளாக உள்ளது.  பல அமேசான் ஊழியர்களுக்கு குடியிருப்புகள் அருகாமையில் உள்ளதால் இந்த இடம் அவர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

இந்நிறுவனத்தின் வேலை பார்த்த ஊழியர்கள் தற்போது, பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல், மற்றும் நீண்ட பயணம் குறித்து வேதனை தெரிவித்து வருகின்றனர். புதிய அலுவலகத்திற்கு மெட்ரோ வசதி இல்லாதது பணியாளர்களின் பயணத்தை அதிகமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த பகுதியில் பல எதிர்கால உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கள் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

அமேசான் இந்தியாவின் செய்தித் தொடர்பாளர், நிறுவனத்தின் புதிய வசதி, ஒத்துழைப்பு மற்றும் பணியாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன வளாகத்தைக் கொண்டிருக்கப் போகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அமேசான் நிறுவனத்தின் இந்த திடீர் இடமாற்றம் பெங்களூரின் ரியல் எஸ்டேட் சந்தையில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow