மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே வன்முறை.. 144 தடை உத்தரவு

மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை காரணமாக, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Mar 18, 2025 - 09:13
 0
மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே வன்முறை.. 144 தடை உத்தரவு
மகாராஷ்டிராவில் இரு பிரிவினர் இடையே வன்முறை.. 144 தடை உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில், அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாக்பூரில் வன்முறை

நாக்பூரில் அவுரங்கசீப் சமாதிக்கு எதிரான போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததால், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவிவருகிறது. தொடர்ந்து, நாக்பூர் மகால் பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலை அருகே இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததாக வதந்திகள் பரவியது. 

மகாராஷ்டிரா முதலமைச்சர்

நாக்பூரில் அமைதி காக்க மகாராஷ்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ் அறிவுறுத்தியுள்ளார். சாம்பாஜி நகரிலுள்ள அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டுமென ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். முகலாய மன்னரான அவுரங்கசீப், தனது கடைசி காலத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வாழ்ந்து மறைந்தார். அவரது உடல் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு, கல்லறை நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையில், அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்பது வலதுசாரி அமைப்பினர், தொடர்ந்து நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். 

Read More: ஆதார், வாக்காளர் அட்டை இணைப்பு; தேர்தல் ஆணையம் ஆலோசனை

இதனிடையே கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சமாஜ்வாதி கட்சியின் மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் அபு ஆஸ்மி, அவுரங்கசீப் ஒரு சிறந்த நிர்வாகி என்று கூறினார். அவர் பல கோயில்களை கட்டியதாக கூறிய அபு ஆஸ்மி, அவுரங்கசீப் வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

போராட்டம்

இதுகுறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து இஸ்லாமியர்கள் பல்வேறு பகுதிகளில் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது சிட்னி பூங்கா மற்றும் மகால் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். அப்போது, பாதுகாப்புக்கு வந்த போலீசார் மீது கற்களை வீசி, வாகனங்களுக்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

144 தடை

இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலவரத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Read More: CSK vs MI: சென்னை-மும்பை மோதும் ஐபிஎல் போட்டி.. ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow