எந்தெத்த பொருட்களுக்கு வரிச்சலுகை? - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு

Nirmala Sitharaman on Custom Duty : புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், மொபைல் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Jul 23, 2024 - 12:56
Jul 23, 2024 - 13:11
 0
எந்தெத்த பொருட்களுக்கு வரிச்சலுகை? - பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
வரிச்சலுகைகள் குறித்து மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Nirmala Sitharaman on Custom Duty : மத்திய பட்ஜெட் 2024 [Union Budget 2024] : நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்சியாக 7 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒரே அமைச்சர் என்ற பெருமையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றார்.

இந்நிலையில் பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மீது மீண்டும் நம்பிக்கை வைத்து மக்கள் தேர்ந்தெடுத்திருப்பதற்கு நன்றி என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய 4 வெவ்வேறு பிரிவினர் மீது கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு, அனைத்து முக்கிய பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை குறைந்தபட்சம் 50% வழங்குவதாக அறிவித்தோம். அதன்படி பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம், [Garib Kalyan Yojana] 80 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடையும் வகையில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும், சில பொருட்களுக்கு வரிச்சலுகை வழங்குவதாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் அறிவித்தார். அதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சங்கள்:

புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது. வரிச் சலுகைகளால் மொபைல் போன்கள், மொபைல் உதிரி பாகங்கள், சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை குறைகிறது.

தங்கம், வெள்ளிக்கு(Gold Silver Import Tax) இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது. பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. 20 கனிமங்களுக்கான சுங்கவரி நீக்கப்பட்டுள்ளது.

இறால் மற்றும் மீன்வகைகளுக்கான ஏற்றுமதி வரி நீக்கம்; ஜவுளி - ஸ்பான்டக்ஸ்க்கான ஏற்றுமதி வரிக்குறைப்பு

ஆன்லைன் வர்த்தகத்திற்கான TDS குறைப்பு

வரிகள் சார்ந்த அறிவிப்புகள்: பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என அறிவிப்பு.

ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு குறைக்கப்படுகிறது; அறக்கட்டளைகளுக்கு இரட்டை வரி முறை நீக்கப்பட்டு, அதே ஒரே வரி முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.

முதலீட்டாளர்களுக்கான ‘ஏஞ்சல் டாக்ஸ்’ ரத்து செய்யப்படுகிறது; தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில், நிலையான கழிவு 15,000 ரூபாயிலிருந்து 75,000 ரூபாயாக உயர்வு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow