பெரி பெரி வீட் (கோதுமை) கிரிஸ்ப்ஸ்; குழந்தைங்க வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க; Easy Snacks Recipe

South Indian Snacks Recipes in Tamil : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய மிகவும் எளிமையாக மற்றும் நொடியில் ரெடியாகக்கூடிய பெரி பெரி வீட் (கோதுமை) கிரிஸ்ப்ஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Jul 23, 2024 - 18:54
Jul 23, 2024 - 19:56
 0
பெரி பெரி வீட் (கோதுமை) கிரிஸ்ப்ஸ்; குழந்தைங்க வேண்டாம்னு சொல்லவே மாட்டாங்க; Easy Snacks Recipe
பெரி பெரி வீட் (கோதுமை) கிரிஸ்ப்ஸ்
Prep Time  min
Cook Time  min
Serving
Difficulty Easy

South Indian Snacks Recipes in Tamil : மழைக் காலத்தில் மாலை நேரத்தில் சூடான காபியுடன் ஏதாவது நொறுக்குத் தீனி இருந்தால் சூப்பராக இருக்குமே என்று நினைக்காதவர்கள் யாருமே இருக்கவே முடியாது. அதேபோல் தற்போது பள்ளிகள் திறந்துவிட்டதால், பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகள் ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து தர சொல்லி நச்சரிப்பார்கள். இந்த மாதிரி சமயங்களில் மிகவும் எளிமையாக மற்றும் நொடியில் ரெடியாகக்கூடிய பெரி பெரி வீட் (Peri Peri Wheat) கிரிஸ்ப்ஸ் செய்து பாருங்கள். மைதாவுக்கு பதிலாக கோதுமையில் இந்த கிரிஸ்ப்ஸ் செய்வதால் சுவைக்கு சுவையும் ஆச்சு... ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமும் ஆச்சு...

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கோதுமையை தினமும் தங்களது டயட்டில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. மேலும் கோதுமையில் உள்ள சத்துக்கள் உடலின் pH அளவின் சமநிலை, தசை வளர்ச்சி, வலுவான எலும்புகள் ஆகியவற்றிற்கு உதவுகிறது. 

Ingredients

  • கோதுமை மாவு - 1 கப்
  • உப்பு - தேவையான அளவு
  • நல்லெண்ணெய்
  • பெரி பெரி மசாலா
  • chilli flakes

Nutritional Information

  • புரோட்டீன்: 15 கி
  • நார்ச்சத்து: 10.6 கி
  • carbohydrate: 71.2 கி
  • கால்சியம்: 38 மிகி
  • மெக்னீசியம்: 136 மிகி
  • பாஸ்பரஸ்: 352 மிகி
  • பொட்டாசியம்: 376 மிகி
  • ஃபோலேட்: 39 மைக்ரோ கிராம்
  • நியாசின்: 5.5 மிகி
  • தியாமின்: 0.5 மிகி

Directions

ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, 1 தேக்கரண்டி நல்லெண்ணெய், சிறிதளவு chilli flakes மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்து மாவு பிசைந்தால் மாவு நல்ல சாஃப்ட்டாக இருக்கும். மாவு கொஞ்சம் செட் ஆக ஒரு 5 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். 

பின்பு இந்த மாவை மெல்லிய தட்டையாக சப்பாத்திக்கு தேய்ப்பதுபோல் நன்கு தேய்த்து விடுங்கள். இதையடுத்து பிரெட் கட்டர் அல்லது ஒரு கத்தி வைத்து சதுரமாக அல்லது டயமண்ட் ஷேப் அல்லது உங்களுக்கு பிடித்த ஷேப்பில் மாவை சிப்ஸ் போல் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். 

இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் சூடானதும் வெட்டி வைத்த கோதுமை மாவை பொறித்து எடுத்துக்கொள்ளுங்கள். கோல்டன் பிரவுன் நிறத்தில் பொறித்து எடுத்துக்கொள்ளுங்கள். இதையடுத்து பொறித்து வைத்த கிரிஸ்ப்ஸ் உடன் ஒரு ஸ்பூன் பெரி பெரி மசாலா சேர்த்து நன்கு கலந்துவிடுங்கள். அவ்வளவுதான்! நொடியில் சூடான சுவையான ஆரோக்கியமான பெரி பெரி வீட் (கோதுமை) கிரிஸ்ப்ஸ் தயார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow