தமிழ்நாடு

சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனை.. கணக்கில் சிக்கிய லட்சக்கணக்கான பணம்?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சார் பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனை..  கணக்கில் சிக்கிய லட்சக்கணக்கான பணம்?

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை ஆலந்தூர் பகுதியில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். இதனால் சார் பதிவாளர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. 

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். திடீரென வந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் படிக்க: பெங்களூரு கட்டிடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு.. உரிமையாளரை தட்டி தூக்கிய போலீஸ்

இதேபோல் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேம சித்ரா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.