பெங்களூரு கட்டிடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு.. உரிமையாளரை தட்டி தூக்கிய போலீஸ்
பெங்களூருவில் கட்டுமான கட்டிடட் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்த நிலையில், கட்டிட உரிமையாளர் முனிராஜ் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் கட்டுமான கட்டிடட் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்த நிலையில், கட்டிட உரிமையாளர் முனிராஜ் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தை போன்று பெங்களூருவிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக பெங்களூரு மெஜஸ்டிக், சாந்திநகர், கேஆர் மார்க்கெட், விதான சவுதா, சிவாஜிநகர், பசவனகுடி, ஜெயநகர், ஹனுமந்தநகர், மல்லேஸ்வரம், யேசவந்தபுரா, ஜலஹள்ளி, தாசரஹள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்தது.
சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் பெங்களூரில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாபுசாபால்யா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடிக் கட்டிடம் கனமழையால் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
தொடர்ந்து 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி 20 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. உரிய அனுமதியின்றி கட்டிடம் கட்டி வந்த அதன் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்னதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: சிக்கிய விநோத திருடன் புல்லட் ராஜ்..இதையெல்லாமா திருடுவாங்க..!
இந்நிலையில் கட்டிட உரிமையாளர் முனிராஜ ரெட்டி உள்ளிட்டு 3 பேர் மீது ஹென்னூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டிட உரிமையாளர் முனிராஜ் ரெட்டி, மகன் புவன் ரெட்டி, கான்ட்ராக்டர் முனியப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மேலும் இருவரின் உடல் அப்பகுதியில் மீட்கப்பட்டதால், பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
What's Your Reaction?