கடலோர மக்களுக்காக குரல் கொடுத்த ரஜினிகாந்த்...வீடியோ வெளியிட காரணம் இதுதானா...
கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்படி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டுள்ளார்.
விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
கடலோர மக்களுக்காக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம் , நம்ம நாட்டின் பெயர், நிம்மதி, சந்தோஷம் அதைக் கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டிற்குள் புகுந்து கோர சம்பவங்களை செய்வார்கள். அதற்கு உதாரணமாக மும்பையில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த கோர சம்பவம். கிட்டத்தட்ட 175 பேரின் உயிரை வாங்கியிருச்சு.
Read more: இறந்தும் உயிர் வாழும் கல்லூரி மாணவர்.. விபத்தில் மூளைசாவு.. உடல் உறுப்பு தானம்..!
இந்த கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருந்து சந்தேகத்திற்குரிய மக்கள் யாராவது நடமாடினால், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
விழிப்புணர்வு வீடியோ
இது தொடர்பாக ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த 100 சிஐஎஸ்எப் வீரர்கள் 7 ஆயிரம் கிலோ மீட்டர் மேற்குவங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்வார்கள்.
Read more:TATA IPL 2025: வெற்றியுடன் தொடங்குமா சென்னை? MI vs CSK அணிகள் இன்று மோதல்!
அவர்கள் உங்கள் பகுதிக்கு வரும்போது, அவர்களை வரவேற்று முடிந்தால் அவங்களுடன் கொஞ்ச தூரம் போய், உற்சாகப்படுத்துங்கள்..நன்றி..வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ் மக்கள்... ஜெய்ஹிந்த்.. இவ்வாறு அவர் பேசியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?






