TATA IPL 2025: வெற்றியுடன் தொடங்குமா சென்னை? MI vs CSK அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழாவின் 3-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Mar 23, 2025 - 10:41
 0
TATA IPL 2025: வெற்றியுடன் தொடங்குமா சென்னை?  MI vs CSK அணிகள் இன்று மோதல்!
MI vs CSK அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

El Clasico 

டாடா ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதும் போட்டி என்பதால், இது ரசிகர்களால் El Clasico  என்று அழைப்படும் நிலையில், இந்த போட்டி ஐபிஎல் ரசிகர்களுக்கு தொடக்க ஆட்டம் போல உள்ளதாக ரசிகர்கள் தங்களின் கருத்துகளை கூறுகின்றனர். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளது. 

ஐபிஎல் மெகா ஆக்‌ஷனில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த நிலையில், சிஎஸ்கே அணியில் இருந்த பழைய வீரர்கள் மற்ற அணிகளுக்கு சென்ற நிலையில், ஆரம்ப காலக்கட்டத்தில் சென்னை அணியில் விளையாடிய அஷ்வின் ரவிச்சந்திரன், சாம் கரண், விஜய் சங்கர் ஆகிய வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். CSK அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான மகேந்திர சிங் தோனி அன்கேப்ட் ப்ளேயராக களம் காண்கிறார்.

சிஎஸ்கே வீரர்கள்

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது முறையாக ருதுராஜ் கெய்ட்வாட் தலையில் களம் காண உள்ள நிலையில், நடப்பு IPL தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று 6 முறையாக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில், தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கேப்டன் சூர்யகுமார் 

சென்னை அணியுடனான போட்டியில் பங்கேற்க 2 நாட்களுக்கு முன்னரே சென்னை வந்த மும்பை அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹர்திக் பாண்டியா, பும்ரா விளையாடத நிலையில்,  இன்றைய போட்டியில் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் களம் காண்கிறார்.  சென்னை மற்றும் மும்பை அணிகள்  தலா 5 கோப்பைகளை வென்ற நிலையில்,  இரு அணிகளும் 6 வது கோப்பைக்கான போட்டியில் மோதிக்கொள்ள இருப்பதை காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் உள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow