பொங்கல் பண்டிகை எதிரொலி... காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை கடுமையாக உயர்வு..!

தஞ்சை உழவர் சந்தை காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகைக்கான  காய்கறிகள், பழங்கள், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தும்  அதனை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

Jan 13, 2025 - 10:40
 0

கூட்டம் அதிகமாக உள்ளதால் உழவர் சந்தை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரம் ஒரு தார் பூவம்பழம் 100 ரூபாய்க்கு விற்கபட்டது இன்று 10 மடங்கு உயர்ந்து 1000 ரூபாய்க்கும் செலவந்தி 5 மடங்கு உயர்ந்து 1 கிலோ 500 ரூபாய்க்கும் விற்கபடுகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் விழா பொங்கல். மாட்டுப்பொங்கல், கன்னி பொங்கல் என மூன்று நாட்கள் சிறபபாக கொண்டாடப்படுகிற விழாவாகும். நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளதால் காய்கறிகள். பழங்கள், பூக்கள் வாங்க  தஞ்சை நாஞ்சிக் கோட்டை சாலை உழவர் சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

பொங்கல் பண்டிகையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்ற பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்கபட்ட செவ்வந்தி இன்று 5 மடங்கு உயர்ந்து 500 ரூபாய்க்கும். 100 ரூபாய்க்கு விற்கபட்ட வாழை தார் ஒன்று 10 மடங்கு உயர்ந்து 1000 ரூபாய்க்கும் விற்பணையாகிறது. 

சர்க்கரை வள்ளி கிழங்கு, அவரை, மொச்சை, உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும் கடுமையாக உயர்ந்து உள்ளது. பொங்கல் பானையில் சுற்றப்படும் இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து ஜோடி 70 ரூபாய் வரை விற்கபடுகிறது. விலை கடுமையாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow