Kavin: கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா... இது என்ன அக்கா – தம்பி காம்பினேஷன்..? ஷாக்கான ரசிகர்கள்!

Actor Kavin Pair With Nayanthara : கவின், நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அபிஸியல் அப்டேட் வெளியான நிலையில், அதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.

Jul 23, 2024 - 12:51
Jul 23, 2024 - 13:07
 0
Kavin: கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா... இது என்ன அக்கா – தம்பி காம்பினேஷன்..? ஷாக்கான ரசிகர்கள்!
Actor Kavin Pair With Nayanthara
Actor Kavin Pair With Nayanthara : கோலிவுட்டின் இளம் ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து வருகிறார் கவின்(Kavin). சீரியல், பிக் பாஸ் என ரசிகர்களிடம் பிரபலமான கவின், டாடா படம் வெளியான பின்னர் வேற லெவலுக்கு சென்றுவிட்டார். ஒரே படத்தில் ஓஹோன்னு வாழ்க்கை என்பதாக கவினின் மார்க்கெட் உச்சம் தொட்டது. டாடாவை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படமும் ரசிகர்களிடம் ரீச் ஆனது. இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்திருந்தாலும், கவின் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.
 
ஸ்டார் படத்தைத் தொடர்ந்து பிளடி பெக்கர் உள்ளிட்ட மேலும் ஒன்றிரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் கவின். ஃபேண்டஸியான படங்களில் ஹீரோவாக நடித்து வந்த சிவகார்த்திகேயன், இப்போது அடுத்த லெவலுக்கு போக முடிவு செய்துவிட்டார். அதன்படி அமரன், எஸ்கே 24 படங்கள் பக்கா ஆக்ஷன் ஜானரில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் சிவகார்த்திகேயனுக்காக கதை வைத்திருந்த இயக்குநர்களின் அடுத்த சாய்ஸ்ஸாக கவின் உருவெடுத்துள்ளார்.    
 
இந்நிலையில், கவினின் புதிய படம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ்ஜின் அசோஷியேட் விஷ்ணு எடவன்(Vishnu Edavan) இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். அவரது முதல் படத்தின் ஹீரோவாக கவின் கமிட்டாகியுள்ளார். இதைவிட இப்படத்தில் கவின் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருப்பது தான் கோலிவுட்டின் ஹாட் & ஹைலெட்டான டாப்பிக்காக மாறியுள்ளது. 

ஒருநேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித், விக்ரம், சூர்யா, தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு போன்ற டாப் ஹீரோக்களின் ஜோடியாக நடித்து வந்தார் நயன். பிரம்மாண்ட பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி, முன்னணி நடிகர்களுக்கு ஜோடி என்றாலும் சரி, இயக்குநர்களின் தேர்வில் நயனுக்கு தான் முதலிடம் இருந்தது. அதேபோல், அறம் திரைப்படம் போல, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார். 
 
அதில் சில படங்கள் தோல்வியடைந்ததால் நயனின் மார்க்கெட் வேல்யூம் கொஞ்சம் டல்லடிக்க ஆரம்பித்தது. இதனால், அப்போது வளர்ந்து வரும் ஹீரோக்களாக வலம் வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருடன் ஜோடி சேர ஆரம்பித்தார். அதேபோல் தற்போது அவர் கவினுக்கு ஜோடியாக கமிட்டாகியுள்ளது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. இது கவினுக்கு செம ஜாக்பாட்டாக இருந்தாலும், படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் பார்க்கும் போது, இருவரும் அக்கா, தம்பி போல இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
 
கொஞ்சம் வித்தியாசமாக உருவாகியுள்ள இந்த போஸ்டரை பார்க்கும் போது, நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இருப்பதை போன்று தெரிந்தது. ஆனால், நன்றாக பார்த்தால் அது கவின் என தெரியவந்ததாகவும், இவர்கள் கெமிஸ்ட்ரியில் ரொமாண்டிக்கலான காதல் காட்சிகள் எல்லாம் செம கிரிஞ்சாக இருக்கும் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாராவின் மார்க்கெட் டவுன் ஆகிக்கொண்டே இருப்பதால், கவினுடன் ஜோடி சேர்ந்துவிட்டாரா என்றெல்லாம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow