சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியைச் சேர்ந்த G.தனபால் உடல் நலக்குறைவு காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
வீணை எஸ்.பாலசந்தரின் இயக்கத்தில் 1964ஆம் ஆண்டு வெளியாகி, பலத்த வரவேற்பை பெற்ற பொம்மை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் ஜி.தனபால். கே.பாலசந்தரின் இயக்கத்தில் 1984ஆம் ஆண்டு வெளிவந்த அச்சமில்லை அச்சமில்லை, பொய்க்கால் குதிரை, ஆணி வேர் படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து, பட்டினப்பிரவேசம், குல கௌரவம், அன்று கண்ட முகம், பொய்க்கால் குதிரை, ஆணிவேர், சவாலே சமாளி, லட்சுமி கல்யாணம், இருகோடுகள், வீர அபிமன்யு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
அதேபோல, நடிகர் ரஜினிகாந்த் நடித்த நான் மகான் அல்ல, விஜயகாந்த் நடித்த சொக்கத்தங்கம், சத்தியராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர், வேலை கிடைச்சிருச்சு உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.