2024ல் அதிக வரி செலுத்தும் விஜய்... ஷாருக்கானுக்கு அடுத்து தளபதி தான்... இவ்வளவு கோடியா?
2024 ஆம் ஆண்டுக்கான அதிக வரி செலுத்துபவர்கள் பட்டியலில் இந்திய அளவில் நடிகர் விஜய் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

இந்திய அளவில் அதிக வரி செலுத்தும் நட்சத்திரங்கள் பட்டியலை Fortune India வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், ரூ.92 கோடியை வரியாக செலுத்தி முதலிடத்தில் உள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். அவரைத்தொடர்ந்து இருந்து நடிகர்கள் சல்மான்கான், அமிதாப் பச்சன் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி நடிகர் விஜய் இரண்டாம் இடத்திற்கு உயர்ந்துள்ளார். நடிகர் விஜய் ரூ.80 கோடியை வரியாக செலுத்தும் நிலையில், சல்மான் கான் ரூ.75 கோடி, அமிதாப் பச்சன் ரூ.71 கோடி, விராட் கோலி ரூ.66 கோடி என அடுத்தடுத்த இடத்தில் நட்சத்திரங்கள் இருக்கின்றனர்.
அதிக வரி செலுத்தும் டாப் பிரபலங்கள்:
- ஷாருக்கான் – ரூ.92 கோடி
- விஜய் – ரூ.80 கோடி
- சல்மான் கான் – ரூ.75 கோடி
- அமிதாப் பச்சன் – ரூ. 71 கோடி
- விராட் கோலி – ரூ.66 கோடி
- அஜய் தேவ்கன் – ரூ.42 கோடி
- எம்.எஸ்.தோனி – ரூ.38 கோடி
- ரன்பிர் கபூர் – ரூ. 36 கோடி
- ஹ்ரித்திக் ரோஷன் & சச்சின் டெண்டுல்கர் – ரூ. 28 கோடி
- கபில் ஷர்மா – ரூ. 26 கோடி
- சௌரவ் கங்குலி – ரூ.23 கோடி
- கரீனா கபூர் – ரூ.20 கோடி
- ஷாஹித் கபூர், மோகன்லால் & அல்லு அர்ஜூன் – ரூ. 14 கோடி
- ஹர்திக் பாண்டியா – ரூ. 13 கோடி
- கியாரா அத்வானி – ரூ.12 கோடி
- பங்கஜ் த்ரிபாதி & கத்ரீனா கைஃப் – ரூ.11 கோடி
முதலிடத்தை பிடித்துள்ள ஷாருக்கானுக்கு கடந்த ஆண்டு மிகப்பெரிய ஆண்டாக அமைந்தது. பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களும் 1000 கோடி வசூலித்தன. நடிகர் விஜயை பொறுத்தவரை கடந்த ஆண்டு வாரிசு, லியோ என இரண்டு படங்களுமே ஹிட் படங்களாக அமைந்தன. ரூ. 300 கோடி செலவில் உருவான லியோ திரைப்படம், ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்ததாக கூறப்பட்டது. இதில் விஜய்க்கு மட்டும் சம்பளமாக ரூ.120 கோடி கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெளியாகியுள்ள கோட் திரைப்படம் 400 கோடி பொருட்செலவில் உருவாகியதாகக் கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு மட்டும் 200 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?






