ஆதார், வாக்காளர் அட்டை இணைப்பு; தேர்தல் ஆணையம் ஆலோசனை

வாக்காளர்கள் பட்டியலில் மோசடியை தடுப்பதாக வாக்காளர் அட்டையுடன், ஆதாரை இணைப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.

Mar 18, 2025 - 08:33
Mar 18, 2025 - 08:33
 0
ஆதார், வாக்காளர் அட்டை இணைப்பு; தேர்தல் ஆணையம் ஆலோசனை
ஆதார், வாக்காளர் அட்டை இணைப்பு; தேர்தல் ஆணையம் ஆலோசனை

நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதால்,  இதன் காரணமாகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

எதிர்கட்சிகள் குற்றசாட்டு

வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடப்பதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் குற்றஞ்சாட்டி வரும் சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் -18) நடைபெறவுள்ளது.  தேர்தலின் போது போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என பாஜக மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பிட கால இடைவெளிக்குள் அதிக அளவு வாக்களார்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.  

இதனிடையே மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள எபிக் எண், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளதாகவும், இதன்மூலம் வாக்காளர்கள் பட்டியலில் மோசடி நடைபெற்றுள்ளது நிரூபணமாகி உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்தது.

தேர்தல் ஆணையம் ஆலோசனை

இந்நிலையில், இதுபோன்ற குறைபாட்டை தவிர்க்க ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைப்பது தொடர்பாக மத்திய உயர் அதிகாரிளுடன் ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முடிவு செய்துள்ளார்.

இது தெடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் உள்துறை செயலாளர், சட்டப்பேரவை செயலாளர் மற்றும் UIDAI சிஇஓ ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

Read More:  அதிமுகவா? தவெகவா?.. முட்டிமோதும் தந்தை மகன்?.. தைலாபுர கூட்டணி கணக்கு என்ன?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow