CSK vs MI: சென்னை-மும்பை மோதும் ஐபிஎல் போட்டி.. ஆன்லைனில் டிக்கெட் பெறுவது எப்படி?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஓரிரு மாதங்களுக்கு திரும்பும் திசையெல்லாம், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தான் பேசுப்பொருளாக இருக்கப்போகிறது. ஐபிஎல் தொடர்களில் ”el clasico” என அழைக்கப்படுவது சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி தான். அதற்குக் காரணம் ஐபிஎல் வரலாற்றில் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது சென்னையும்,மும்பையும் தான்.
இரண்டு அணிகளும் தலா 5 முறை கோப்பை வென்றுள்ள நிலையில், 6-வது முறையாக கோப்பை வெல்ல இரு அணிகளும் தங்கள் முழுபலத்தை களத்தில் காட்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நடப்பு ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், வருகிற 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளன. போட்டி சென்னையில் நடைப்பெற உள்ளதால், சென்னை அணி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது.
டிக்கெட் எப்படி பெறுவது?
சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் வருகிற 19 ஆம் தேதி காலை 10:15 மணி முதல் ஆன்லைனில் வாங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. chennaisuperkings.com & district.in போன்ற இணையதளங்களில் டிக்கெட்டினை பெறலாம்.
டிக்கெட் விலை எவ்வளவு?
C/D/E (lower) - ரூ.1,700
I/J/K (upper) - ரூ.2,500
C/D/E (upper)- ரூ.3,500
I/J/K (lower) - ரூ.4000
KMK terrace- ரூ.7500
நடப்பு ஐபிஎல் தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் செயலியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:ஐபிஎல் போட்டிக்கு தாவிய ஆல்ரவுண்டர் வீரருக்கு வந்தது சிக்கல்!
What's Your Reaction?






