மகாராஷ்டிரா தேர்தல்: ஆட்சி அமைக்கப்போவது யார்? - விறுவிறு வாக்குப்பதிவு
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் காலை 09 மணி நிலவரப்படி 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 1,00,186 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. 4.97 கோடி ஆண் வாக்காளர்களும், 4.66 கோடி பெண் வாக்காளர்களும் என மொத்தம் 9.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியும் மோதுகின்றன.
இந்த தேர்தலில் 4,136 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பையின் வொர்லி சட்டமன்றத் தொகுதியில் சிவசேனா (உத்தவ்) கட்சி சார்பாகவும், சிவசேனா (ஷிண்டே) தரப்பில் மிலிந்த் தியோராவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) சார்பில் சந்தீப் தேஷ்பாண்டேவும் போட்டியிடுகின்றனர்.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், காலை 09 மணி வரை 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், “60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன், வடக்கு மும்பையில் உள்ள ஆறு இடங்களிலும் மகாயுதி வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை வாக்கு மையத்தில் செலுத்தினர்.
What's Your Reaction?