மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்.. 17 பேர் உயிரிழப்பு..!
உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயமைடந்த நிலையில், 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமாக உள்ளது. இப்புணித இடத்தில், ஆண்டுதோறும் 'மகாமேளா' என்னும் புனித நீராடுதல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநில மக்கள் மட்டுமில்லாது, உலகின் பல இடங்களில் உள்ள பொதுமக்களும், மகா கும்பமேளாவிற்கு வந்து புனித நீராடுகின்றனர்.
மகா கும்பமேளாவானது 12 பூரண கும்ப மேளாவுக்கு பிறகு, அதாவது, 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மஹா கும்பமேளா ஆகும். திரிவேணி சங்கமத்தில், இம்மாதம், 13ல் துவங்கிய மகா கும்பமேளா, அடுத்த மாதம் பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவடைகிறது. 45 நாட்களில், 45 கோடிக்கும் அதிகமான மக்கள் மஹா கும்ப மேளாவில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு மற்றும் மாநில அரசு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், மகா கும்ப மேளாவின் மவுனி அமாவாசைக்காக திரிவேணி சங்கமத்தில் பெருமளவில் திரண்ட பக்தர்களிடையே தள்ளுமுள்ளு நெரிசல் ஏற்பட்டதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 17 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்புள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.
தை அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், மேளா பகுதியில் தடுப்பு உடைந்தது. அதிகாலையில் நீராட தடுப்புகளைத் தாண்டிசெல்ல முயன்றதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாகவும், கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அதிகாலை 2 மணிக்கு தடுப்பு உடைந்த நிலையில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்த நிலையில், மேளா ஷேத்ராவில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொறுப்பு அதிகாரி அகான்ஷா ரானா, காயம் அடைந்தவர்கள் யாரும் கவலைக்கிடமாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நிலைமையை கேட்டறிந்ததாகவு, மீட்பு நடவடிக்கைக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?