உலகை நேசித்த மனிதர் ரத்தன் டாடா காலமானார்!
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா(86) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா(86) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அவசர சிகிச்சை பிரிவில் தீவிர மருத்துவ கண்காணிப்பில் ரத்தன் டாடா உள்ளதாகவும், அவரின் உடல் நிலை சற்று சவலைக்கிடமாகவே உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
இதனைத் தொடர்ந்து, தனது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் பொய்யானது என தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார் ரத்தன் டாடா. அதாவது, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என ரத்தன் டாடா தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இது குறித்து அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியதாவது, “எனது உடல் நிலை குறித்து சமீபத்தில் பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன். ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. ஊடகங்களில் தவறான தகவல் பரப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ரத்தன் டாடா பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, மீண்டும் ரத்தன் டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து, அறிக்கை வெளியிட்ட டாடா சன்ஸ்-ன் நிர்வாகி சந்திரசேகரன், “ டாடாவின் முன்னெடுப்புகள் இனிவரும் தலைமுறையினருக்கும் உதவிகரமாக இருக்கும். அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியும், நண்பனும் ஆவார். அவரது தலைமையின் கீழ், டாடா குழுமம் சமூக எண்ணம் தவறாமல் சிறப்பாக செயல்பட்டது. அவரை பிரிந்து வாடும் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தக் லைஃப் ட்ரெய்லர் லோடிங்... KH 237 ஷூட்டிங் ரெடியான கமல்... அடுத்தடுத்து அதிரடி அப்டேட்!
மேலும், இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள், சினிமா நடிகர்கள் உள்பட நாடே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
What's Your Reaction?