ThugLife: தக் லைஃப் ட்ரெய்லர் லோடிங்... KH 237 ஷூட்டிங் ரெடியான கமல்... அடுத்தடுத்து அதிரடி அப்டேட்!
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நாயகன் படத்துக்குப் பின்னர் கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தக் லைஃப். சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்னர் கமலும் மணிரத்னமும் இணைந்துள்ள இப்படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி இருவரும் கமிட்டாகியிருந்தனர். ஆனால், இருவருமே கால்ஷீட் பிரச்சினை காரணமாக இப்படத்தில் இருந்து விலக, அவர்களுக்குப் பதிலாக சிம்பு கமிட்டானார். அதன்படி, கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக், அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பிரம்மாண்டமான மல்டி ஸ்டார்ஸ் காம்போவில் உருவாகி வருகிறது தக் லைஃப்.
கேங்ஸ்டர் ஜானரில் ஆக்ஷன் மூவியாக உருவாகும் தக் லைஃப், கமல் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான போதே செம ஹைப் இருந்தது. அதேபோல், சிம்புவின் இன்ட்ரோ வீடியோவும் தக் லைஃப் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதையெல்லாம் இன்னும் எகிற வைக்கும் விதமாக அடுத்த அப்டேட்டுக்கு ரெடியாகிவிட்டதாம் படக்குழு. அதன்படி தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பற்றி செமையான அப்டேட் வெளியாகியுள்ளது.
2022ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி, கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக தக் லைஃப் படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியானது. அதன்பின்னர் இந்தப் படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை, மீண்டும் 2023ம் ஆண்டு நவ.7ம் தேதி, கமல் பிறந்தநாள் தினத்தில் தக் லைஃப் ஷூட்டிங் தொடங்கியதாக டைட்டில் டீசருடன் அப்டேட் வந்தது. அதேபோல் இந்தாண்டு நவம்பர் 7ம் தேதி, கமல் பிறந்தநாளுக்கு தக் லைஃப் ட்ரெய்லரை வெளியிட படக்குழு பிளான் செய்து வருகிறதாம். இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், பேட்ச் ஒர்க், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டுமே மிச்சம் உள்ளது.
அதனால் தக் லைஃப் ட்ரெய்லர் அல்லது ஸ்பெஷல் டீசர் ஒன்றை கமல் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவரும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தக் லைஃப்-ஐ தொடர்ந்து அன்பறிவ் பிரதர்ஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். இது அவரது 237வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தற்போது சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் கமல்ஹாசன். அப்போது பேசிய கமல், சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களை விட ராணுவத்தில் பலியாகும் வீரர்களின் எண்ணிக்கை குறைவு தான். ராணுவத்தில் எந்த ஆபத்து வந்தாலும், ஒரு வீரர் மற்றொருவரை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றிவிடுவார்கள். ஆனால், சாலை விபத்தில் அப்படியெல்லாம் நடக்காது, இதனை அமரன் ப்ரோமோஷனுக்காகவோ அல்லது இப்படம் நன்றாக ஓட வேண்டும் என்றோ சொல்லவில்லை. இதுதான் உண்மை, ஆர்மியில் வேலை பார்ப்பது தான் பாதுகாப்பானது எனக் கூறியுள்ளார். கமலின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
What's Your Reaction?