September Month Rasi Palan 2024 : செப்டம்பர் மாதத்தில் தேடி வரும் புதிய வாய்ப்பு.. குபேர யோகம் யாருக்கு?

September Month Rasi Palangal 2024 : செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் 15 நாட்களும் கன்னி ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார். சுக்கிரன் கேது உடன் இணையப்போகும் சூரியனுக்கு குருவின் பார்வையும் ராகுவின் பார்வையும் கிடைக்கிறது. இந்த கிரகங்களின் கூட்டணியால் சிம்மம், கன்னி, துலாம் விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Sep 1, 2024 - 13:59
Sep 2, 2024 - 11:44
 0
September Month Rasi Palan 2024 : செப்டம்பர் மாதத்தில் தேடி வரும் புதிய வாய்ப்பு.. குபேர யோகம் யாருக்கு?
September Month Rasi Palangal 2024

September Month Rasi Palangal 2024 : ஆங்கில மாதத்தின் 9வது மாதமான செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்வார். ஆட்சி பெற்ற சூரியன் செப்டம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு கன்னி ராசியில் கேது, சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். 18ஆம் தேதி முதல் சுக்கிரன் தனது நீச்ச நிலையில் இருந்து ஆட்சி பெற்ற நிலைக்கு சென்று துலாம் ராசிக்கு சென்று அமரப்போகிறார். புதன் சிம்ம ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்வார். மாதம் முழுவதும் குரு ரிஷப ராசியிலும், செவ்வாய் மீன ராசியிலும் சனி கும்ப ராசியிலும் பயணம் செய்ய ராகு மீன ராசியில் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி கூட்டணியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

சிம்மம்: 

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில்(September Matha Rasipalan 2024) உங்கள் வாழ்க்கையில் அதிசயம் நிகழப்போகிறது.புதிய வாய்ப்புகள் வந்து உங்கள் வீட்டு கதவை தட்டப்போகிறது. வரப்போகும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்துங்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெற்றிகள் நிறைந்த மாதமாக இது அமைந்துள்ளது. பொருளாதார நிலை நன்றாக இருக்கும். திடீர் பண வருமானம் வந்து திக்குமுக்காட வைக்கப்போகிறது. பண வருமானம் அதிகரிக்கும். புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். இரண்டாம் வீட்டில் கேது உடன் சேர்ந்துள்ள சுக்கிரன் மாத பிற்பகுதியில் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யப்போகிறார்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் தேடி வரும்.மாணவர்கள் கடுமையாக உழைப்பீர்கள். உணவு விசயத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுங்கள்.

கன்னி: 

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குரு பகவான் மாதம் முழுவதும் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்வதால் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  சரியான முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவும். உங்கள் தன ஸ்தான அதிபதியும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியுமான சுக்கிரன் மாத முற்பகுதியில் உங்கள் ராசியில் கேது உடன் இணைந்து பயணம் செய்கிறார். திடீர் பண வருமானம் வரும். காதல் திருமணம்  முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். திருமண உறவில் உற்சாகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உற்சாகமான மாதம் வெற்றிகள் தேடி வரும். புதிய பாதையை உயர்கல்வியை தேர்வு செய்பவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்களின் ஆலோசனையை பெறுவது அவசியம். 

துலாம்: 

சுக்கிரபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் கேது உடன் ராசி நாதன் சுக்கிரன் நீச்ச நிலையில் பயணம் செய்கிறார். திடீர் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்பு கைகொடுக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் மாற்றம் செய்ய விரும்பினால் மாத பிற்பகுதியில் முயற்சி செய்யலாம். சுக்கிரன் 18ஆம் தேதிக்கு மேல் உங்கள் ராசியில் வந்து ஆட்சி பெற்று அமரப்போகிறார்.புதிய முயற்சிகள் கைகொடுக்கும் நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வெளியூர் பயணங்கள் உண்டாகம். கடினமான சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும், படிப்பில் முழுமையாக கவனம் செலுத்தத் தொடங்குங்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். 

விருச்சிகம்: 

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சுக்கிரன் கேது இணைந்து பயணம் செய்வதால் உங்களுக்கு அற்புதங்கள் நிகழும். பண வருமானம் அதிகரிக்கும். புதிய அனுபவங்கள் தேடி வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி இடையேயான ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் நிறைந்த மாதம் இது. மாத பிற்பகுதியில் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் வந்து ஆட்சி பெற்று அமர்வதால் விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது. திடீர் பண வருமானம் வரும் கூடவே செலவுகளும் வரிசை கட்டி நிற்கப்போகிறது. சிக்கனம் தேவைப்படும் மாதம். சிறு உல்லாச பயணம் செல்வீர்கள் அது உங்கள் மனதை உற்சாகப்படுத்தும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow