ஆந்திரா, தெலுங்கானாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. பலர் உயிரிழப்பு.. விடுமுறை அறிவிப்பு

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது.ஹைதராபாத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 1, 2024 - 13:53
 0
ஆந்திரா, தெலுங்கானாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. பலர் உயிரிழப்பு.. விடுமுறை அறிவிப்பு
andhra rain

ஆந்திரமாநிலத்தில் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகனமழை கொட்டியுள்ளது.ஹைதராபாத்தில் அதீத கனமழை கொட்டும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது. தெலுங்கானாவின் அனைத்து மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம், கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தெலுங்கானாவின் கேசமுத்ரம்- மகபூபாத் இடையே மழை வெள்ளத்தில் தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. விஜயவாடாவில் இருந்து வாரங்கல் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. டெல்லி- விஜயவடா எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டியது. என்டிஆர் மாவட்டத்தின் விஜயவாடா நகரில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. மொகல்ராஜபுரம் என்ற இடத்தில் மலையின் ஒரு பகுதி அப்படியே குடியிருப்புகள் மீது சரிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவால் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெடகாக்கனி என்ற இடத்தில் மழையால் மாணவர்களை காரில் ஆசிரியர் ஒருவர் அழைத்துச் சென்றார். இந்த கார் ஓடையை கடக்க முயன்றபோது வெள்ளம் அப்படியே அடித்துச் சென்றது. இதில் ஆசிரியரும் 2 மாணவர்களும் உயிரிழந்தனர்.

இதனிடையே ஹைதராபாத்தில் அதீத கனமழை கொட்டும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஹைதராபாத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஹைதராபாத், விஜயவாடாவில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகளைத் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளைக் கண்காணிக்க சிறப்பு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow