September Month Rasi Palan 2024 : செப்டம்பர் மாதத்தில் மாளவியா யோகம், விபரீத ராஜயோகம் யாருக்கு?

September Month Rasi Palan 2024 In Tamil : செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம ராசியில் 15 நாட்களும் கன்னி ராசியில் 15 நாட்களும் பயணம் செய்வார். சுக்கிரன் கேது உடன் இணையப்போகும் சூரியனுக்கு குருவின் பார்வையும் ராகுவின் பார்வையும் கிடைக்கிறது. இந்த கிரகங்களின் கூட்டணியால் மேஷம் முதல் கடகம் ராசிவரை பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Sep 1, 2024 - 07:19
Sep 1, 2024 - 10:29
 0
September Month Rasi Palan 2024 : செப்டம்பர் மாதத்தில் மாளவியா யோகம், விபரீத ராஜயோகம் யாருக்கு?
September Month Rasi Palan 2024 In Tamil

September Month Rasi Palan 2024 In Tamil : தென்மேற்கு பருவமழை காலமான ஆவணி , புரட்டாசி மாதம் இணைந்து வரும் மாதம் செப்டம்பர் மாதம். ஆங்கில மாதத்தின் 9வது மாதமான செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்வார். ஆட்சி பெற்ற சூரியன் செப்டம்பர் 16ஆம் தேதிக்குப் பிறகு கன்னி ராசியில் கேது, சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்யப்போகிறார். 18ஆம் தேதி முதல் சுக்கிரன் தனது நீச்ச நிலையில் இருந்து ஆட்சி பெற்ற நிலைக்கு சென்று துலாம் ராசிக்கு சென்று அமரப்போகிறார். புதன் சிம்ம ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்வார். மாதம் முழுவதும் குரு ரிஷப ராசியிலும், செவ்வாய் மீன ராசியிலும் சனி கும்ப ராசியிலும் பயணம் செய்ய ராகு மீன ராசியில் பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் இடப்பெயர்ச்சி கூட்டணியால் மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். 

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய மாதமாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.  லாப வீட்டில் உள்ள சனிபகவான் உங்கள் வருமானத்தை அதிகரிப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்க உங்களுக்கு வாய்ப்புகள் இருக்கும். சூரியன், சனி நேரடி பார்வையால் செல்வ வளம் பெருகும். ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் ஆறாம் வீட்டில் நீச்சம் பெற்று கேது உடன் இணைந்துள்ளார். ராகு, செவ்வாய் மற்றும் குரு பகவானின் பார்வை கிடைப்பதால் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும்.  செப்டம்பர் 18 முதல், சுக்கிரன் தனது துலாம் ராசிக்கு சென்று ஆட்சி பெற்று பயணம் செய்யப்போகிறார். மாளவியா யோகம் தேடி வரப்போகிறது. திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும்.  திருமணமானவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும், ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சூரிய நமஸ்காரம் செய்வது அற்புதமான பலன்களை தரப்போகிறது. 

ரிஷபம்: 

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பத்தாம் வீட்டின் அதிபதியான சனி பகவான், பத்தாம் வீட்டில் வக்ர நிலையில் பயணம் செய்கிறார்.  வேலை செய்யும் இடத்தில் பளு கூடும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும். உங்கள் உழைப்பு வீண் போகாது நல்ல வெற்றியை தரும். மாதத்தின் முற்பாதியில், ஆறாம் வீட்டின் அதிபதியான சுக்கிரன் பகவான், கேது பகவானுடன் சேர்ந்து ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் மாற்றம் ஏற்படுவதுடன், அதற்கான முயற்சிகளையும் செய்வீர்கள்.  ராசி அதிபதி சுக்கிரன் செப்டம்பர் 18 முதல் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமர்வதால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது.  ஜென்ம குரு மனக்குழப்பத்தை ஏற்படுத்தினாலும் ஏழாம் வீட்டில் குருவின் பார்வை கிடைப்பதால் திருமண யோகம் கைகூடி வரும்.  செவ்வாய் பகவான் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் உங்கள் பேச்சில் சற்று கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய மாதமிது. 

மிதுனம்:

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவுகள் இந்த மாதம் அதிகரிக்கும். சவால்கள் நிறைந்த மாதம். ராசியில் செவ்வாய் அமர்ந்து மாதம் முழுவதும் பயணம் செய்கிறார். கோபத்தை கட்டுப்படுத்தி நிதானத்தை கடைபிடிக்கவும். இரவு நேரங்களில் காரமான உணவுகளை தவிர்க்கவும். பணிபுரியும் இடங்களில்  மிகவும் புத்திசாலித்தனமாக வேலை செய்ய வேண்டும், இதனால் எந்த ஒரு பிரச்சனையும் உங்களை தொந்தரவு செய்யாது.  காதல் உறவுகளுக்கு சாதகமாக இருக்கும். குறிப்பாக மாதத்தின் பிற்பகுதி சாதகமாக இருக்கும். திருமண உறவுகளில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று பயணம் செய்யும் காலத்தில் பிள்ளைகள் வாழ்க்கையில் சுப காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டிய மாதமிது. குடும்ப ஒற்றுமை அதிகரிக்க ஸ்ரீராம நாம மந்திரம் கூறி வழிபடவும். 

கடகம்: 

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதம். லாப குரு கோடிகளை கொட்டிக்கொடுக்கப்போகிறார். அஷ்டமத்து சனி காலமும் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரப்போகிறது. சவால்களை எதிர்கொண்டாலும் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் திருமண உறவுகள் சந்தோஷத்தை கொடுக்கும். காதல் கைகூடும். மாத முற்பகுதியில் பதற்றமான மனநிலையில் இருப்பீர்கள். வேலை செய்யும் இடங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வருமானம் அதிகரிக்கும், கூடவே செலவுகளும் அதிகரிக்கும் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow