Priyansh Arya : ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள்.. 65 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நாளில் அதிசய சாதனை..
Priyansh Arya Iconic Record Six Sixers in One Over : தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி வீரர் பிரியான்ஷ் ஆர்யா, ஒரு ஓவரின் 6 சிக்ஸர்கள் விளாசியதும், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட் கர்ஃபீல்ட் சோபர்ஸ் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசியதும் ஒரே தேதியில் நிகழ்ந்தது சுவராஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
Priyansh Arya Iconic Record Six Sixers in One Over : நேற்று நடைபெற்ற டெல்லி பிரீமியர் டி20 லீக் போட்டியில், தெற்கு டெல்லி ஸ்டார்ஸ் அணியும், வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில், தெற்கு டெல்லி ஸ்டார்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.
இதில், தெற்கு டெல்லி ஸ்டார்ஸ் [South Delhi Superstarz] அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு, 308 ரன்கள் குவித்தது. இந்திய லீக் போட்டியில் ஒரு அணியால் அடிக்கப்பட்ச ரன்கள் என்ற சாதனையை தெற்கு டெல்லி ஸ்டார்ஸ் அணி படைத்தது. மேலும், ஒட்டுமொத்த லீக் போட்டிகளில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகப்பட்ச ரன் இதுவாகும். இதற்கு முன்னதாக, நேபாள் அணி 314 ரன்கள் குவித்து சாதனை படைத்து முதலிடத்தில் உள்ளது.
மேலும், தொடக்க வீரராக களமிறங்கிய பிரியான்ஷ் ஆர்யா 50 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் உட்பட 120 ரன்கள் குவித்தார். மேலும், ஒரு ஓவரின் 6 பந்துகளையும், சிக்ஸருக்கு விரட்டினார். மேலும், அட்டகாசமாக ஆடிய ஆயுஷ் பதோனி 55 பந்துகளில் 19 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உட்பட 165 ரன்கள் குவித்தார். இருவரும் இணைந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 286 ரன்கள் அடித்தனர்.
இதனையடுத்து, 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து, 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தெற்கு டெல்லி ஸ்டார்ஸ் அணி தரப்பில் ராகவ் சிங் 3 விக்கெட்டுகளையும், டிக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதில், சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், 1968ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் லீக் போட்டி ஒன்றில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் லெஜண்ட் சர் கர்ஃபீல்ட் சோபர்ஸ் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். சரியாக 56 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய வீரர் ஒருவர் இதே நாளில் இந்த சாதனையை படைத்திருப்பது சுவராஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?