Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 22 - குருவின் அருளால் குதூகலம் யாருக்கு?

Today Horoscope Predictions in Tamil: குரு பகவானின் அருள் நிறைந்த வியாழக்கிழமையான இன்றைய தினம் சந்திரன் மீன ராசியில் பயணம் செய்கிறார். சந்திரன் பயணத்தாலும் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டம் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 22, 2024 - 05:30
 0
Today Horoscope: இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 22 - குருவின் அருளால் குதூகலம் யாருக்கு?
Today Rasi Palan 2024

Today Horoscope Predictions in Tamil: நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆவணி மாதம் 06ஆம் நாள் ஆகஸ்ட் 22ஆம் தேதி வியாழக்கிழமை திருதியைத் திதி பகல்  01.46 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 10.05 மணி வரை அதன் பின் ரேவதி நட்சத்திரம். சந்திரன் பயணத்தால் மேஷம் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். இன்று மகா சங்கடர சதுர்த்தி, வாஸ்து நாள்.


மேஷம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலையில் இருந்த மந்த நிலை மாறும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. 

ரிஷபம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.  இன்று வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.  குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்துவீர்கள்.  புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் பேசுவது மனதில் மகிழ்ச்சியை கொடுக்கும்.

மிதுனம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று தொழில் வியாபரம் செய்பவர்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும்.  அரசு துறை சார்ந்தவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களின் நிதி தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே பிரச்சினை தீரும்.

கடகம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வீண் செலவுகளால் குடும்பத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கலாம். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பெற்றோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களது அன்பை பெற முடியும். வேலையில் இன்று உங்களுக்கு போட்டி பொறாமைகள் குறையும்.

சிம்மம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.  உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

கன்னி

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்க ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

துலாம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.  குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்குட். உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த  பாதிப்புகள் நீங்கும்.  பணவருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வீட்டில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.  

தனுசு

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு  மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வேலையில் இருப்பவர்கள் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  குடும்பத்தில் இருப்பவர்களுடன் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

மகரம்

சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வருமானம் தாராளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கும்பம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில்  பயணம் செய்கிறார். இன்று உடன் பிறந்தவர்கள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படலாம். சுப காரிய பேச்சுவார்த்தைகள் வேண்டாம் தடை தாமதங்கள் உண்டாகும். வீண் செலவுகளை கட்டுப்படுத்தினால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வெளி வட்டார தொடர்புகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.

மீனம்

சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்குள் சஞ்சரிக்கிறார். ராகு உடன் சந்திரன் இணைந்துள்ளதால் உங்களுக்கு சின்ன சின்ன மன அழுத்தங்கள் இருக்கலாம். கவனமாக இருக்கவும். உங்களின் நிதி நிலைமை நன்றாக இருக்கும். சகோதரர்கள் மூலம்  நல்ல செய்திகள் வந்து சேரும்.   வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் லாபம் வரும் உங்களின் வருமானம் இரட்டிப்பாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow